13ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய
எவ்விகையிலும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்களை அதிகரிப்பதற்கு மாத்திரமே ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு,
மாவடிச்சேனையில் நேற்று (25) நடைபெற்ற ஸ் கல்குடாத் தொகுதி இளைஞர்
காங்கிரஸ் காரியாலயத்தை திறந்து வைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர்
காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் நேற்று (25.05.2013) கொழும்பு
மட்டக்களப்பு பிரதான வீதியில் மாவடிச்சேனையில் திறந்த வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர்
காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளருமானர் எம்.எம்.அஹமட் தலைமையில்
இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசியத்
தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
காரியாலயத்தைத் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் அஹமட் நஸீர், அமைச்சரின் இணைப்பாளர்கள் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment