Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அழுத்கம பிரச்சினை ஒரே பார்வையில் (புகைப் படங்கள் இணைப்பு)

Monday, June 160 comments



வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதில் உள்ளூர் ஊடகங்கள் சுயதணிக்கை போக்கை கடைப்பிடிப்பதாகத் கூறப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு செய்திகளைக் காணமுடியவில்லை. இன்றைய சம்பவங்கள் குறித்து எதனையும் ஒளி / ஒலி பரப்ப வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து சில ஊடகங்களுக்கு உத்தரவு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அளுத்கமவில் 10 கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... - See more at: http://www.newslnk.com/2014/06/blog-post_3091.html#sthash.RZFFzv1m.dpuf
அளுத்கமவில் 10 கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



 அளுத்கம - பேருவளைப் பகுதிகளுக்கான தொலைபேசி இணைப்புக்கள் செயலிழக்க வைக்கப்பட்டு உள்ளதாக பிரதேச தகவல்கள் கூறுகின்றன. அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அளுத்கமவில் 10 கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டுவர பொலிஸ் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம, தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே  காவற்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பினரால்  தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினா்  தெரிவித்தனர். நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்துள்ளது.  இந்த நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து  அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து கூட்டம் ஒன்றை நடத்திய பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன.

இதில் 10க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்களுக்கு கல் வீசப்பட்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சம்பவங்களில் எவை முதலிலும், எவை பின்னரும் நடந்தன என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகின்ற போதிலும், பொதுபலசேனாவே முஸ்லீம்களை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் இறங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் வீடுகளும் பள்ளிவாசல்களும் கல்வீசித் தாக்கப்பட்டன என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. உள்ளூர் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தான் தனது சொந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்பட்டார் என உள்ளூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.  இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதில் உள்ளூர் ஊடகங்கள் சுயதணிக்கை போக்கை கடைப்பிடிப்பதாகத் கூறப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு செய்திகளைக் காணமுடியவில்லை. இன்றைய சம்பவங்கள் குறித்து எதனையும் ஒளி / ஒலி பரப்ப வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து சில ஊடகங்களுக்கு உத்தரவு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by