அமைச்சரே நீங்கள் 18.6.2014 பாராளுமன்றத்தின் ஐனாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் உரையின் போது இலங்கை முஸ்லிம் களுக்கு தனி நாடு கோருவேன் எனக் கூறினீர்கள் இவ்விடயம் செய்தியாக வெளியாகியது அது தொடர்பாக உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். நீங்கள் பதில் தர வேண்டும் தற்போது இலங்கையில் உள்ள சிறுபாண்மையினமான முஸ்லிம்களின் மீது மேற் கொள்ளப்படும் பௌத்த அடிப்படை வாதக்குளுக்கள்; முஸ்லிம்களின் உடமைகளையும் சொத்துக்களையும், உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது இதற்கு எதிராக போராட்டம் நடத்தவோ அல்லது குரல் கொடுக்கவோ உங்களால் முடியவில்லை அதே போன்று அல்லாஹ்வின் இல்லமான பள்ளி வாயல்கள் அல்லாஹ்வின் கலாமான (குர்ஆன்கள்) நாடு பூராகவும் உடைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருகின்றது இதை தடுத்து நிறுத்தவோ அல்லது இதற்கெதிராக குரல் கொடுக்கவோ உங்களால் முடியவில்லை.
நாடுபூராகவும் வாழும் முஸ்லிம்களின் நிலங்கள் இருப்பிடங்கள் சூரையாடப்பட்டு வருகிறது. இதைத்தடுத்து நிறுத்தவோ அல்லது குரல் கொடுக்கவோ உங்களால் முடியவில்லை. இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மதரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், இன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை தடுக்கவோ அல்லது இதற் கெதிராக குரல் கொடுக்கவோ உங்களால் முடிவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்;கள் இன்று வரைக்கும் அகதி முகாம்களில் உள்ளனர் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ அல்லது இவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தவோ உங்களால் முடியவில்லை.
உங்கள் ஊருக்கு அண்மித்த ஊரான பொத்துவில் முஸ்லிம்களின் நில அபகரிப்பு இடப் பிரச்சினை இது வரைக்கும் இருந்து கொண்டிருக்கிறது இதற்கான தீர்வோ அல்லது இதற்கு எதிராக குரல் கொடுக்க உங்களால் முடியவில்லை.
இவை அனைத்தையும் விட்டு விடுவோம.; உங்கள் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் 2004 – 2014 இது வரைக்கும் கொடுக்கப் பட வில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இது வரைக்கும் கூடாரங்களிலும் வாடகை இடங்களிலும் வாழ்கின்றனர் பெரும்பாண்மை இன வாதிகளால் கொடுக்கப்படாமல் தடுத்து வைத்திருக்கும் இந்த சுனாமி வீடுகளை உங்களால் மீட்டுத்தரவோ அல்லது மாற்றுக் காணிகள் கொடுத்து இவர்களைக் குடியமர்த்தவோ அல்லது இதற்கெதிராக குரல் கொடுக்கவோ உங்களால் முடிவில்லை. அதே போன்று அக்கரைப்பற்று அட்டாளச்சேனை விவசாயிகளின் பல உயிர்களை இழந்து பெற்ற பெரும் சொத்தாகக் கருதப் படும் வட்டமடு (பல்லாயிரக்காணக்கான விவசாயக் காணிகள்) 1968 – 2014 இன்று வரைக்கும் தங்களின் ஜீவனோபாய மான விவசாயத்தை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்.
அதற்கு தீர்வு கொடுக்கவோ அல்லது இதற்காக குரல் கொடுக்கவோ உங்களால் முடியவில்லை, உங்களின் பக்கத்து ஊரான பாலமுனை, ஒலுவில் மக்கள் துறைமுகத்தால் தங்களின் இருப்பிடங்களை இழந்த அம் மக்களுக்கான நஷ;ட ஈட்டையோ அல்லது வேறு காணிகள் வளங்கவோ அல்லது இம் மக்களுக்காக குரல் கொடுக்கவோ உங்களால் முடிவில்லை.
இவ்வாறு இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. இதற்கெல்லாம் ”தீர்வு” பெற்றுக் கொடுக்க முடியாத நீங்கள் 18-.6-.2014 அன்று பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தனி நாடு கோருவேன் என பேசியுள்ளீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் அமைச்சரே!
மக்கள் உங்களிடம் முஸ்லிம்களுக்கு அத் தனி நாட்டைத் தாருங்கள் என்று கேட்டால் உங்களால் பெற்றுத் தர முடியுமா?
இப்படிக்கு
பா. அப்துல் குத்தூஸ்
அக்கரைப்பற்று.
Post a Comment