இன்று மு.ப. 12.15 மணியளவில் கம்பளை
ஸாஹிராக் கல்லூரிக்கு பொது பல சேனா அமைப்பின் பிரமுகர்கள் சமூகம்
தந்துள்ளனர். அதே இடத்திற்கு பிரதமரின் மகன் குழுவினரும் வருகை
தந்ததையிட்டு இரு குழுவினருக்குமிடையில் கைகளப்பு ஏற்பட்டதாகவும்
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாடசாலை குறித்த
நேரத்திற்கு முன் விடப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது: முன்பு
என்றும் இல்லாத படி இம்முறை வெசாக் பண்டிகைக்கான மத அனுஷ்டானங்களை பௌத்த
மத ஆசிரியர்களும், ஊழியர்களும் பாடசாலையிலேயே (பிரித் ஓதி)
மேற்கொண்டிருந்தனர். இதற்கான அனுமதியை அதிபர் மிக நிர்பந்த சூழ்நிலையிலேயே
வழங்கி இருந்தார். ஆனால் கடந்த காலங்களில் அருகிலுள்ள பன்சலையில் தான்
இவ்வனுஷ்டானங்களை செய்து வந்துள்ளனர்.
பின்பு மறுநாள் ஆரம்பப் பிரிவு (Pசiஅயசல
ளுஉhழழட) ஆசிரியைகள் இருவர் (பௌத்த மத்தினர்) சிறுபிள்ளைகளுடன் வெசாக்கூடு
செய்து அவைகளை வகுப்பறையில் தொங்க விட்டிருந்தனர். இத்தனைக்கும் இந்த
வகுப்பில் இரண்டு பௌத்த மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனை அறிந்த
அதிபர் இதுபற்றி எடுத்துக் கூறி இதனை தவிர்ந்துகொள்ளும்படி ஆசிரியர்களை
வேண்டியுள்ளார். இவ்விடயத்தை சில ஆசிரியைகள் வெளியே திரிபுபடுத்திக் கூறி
விடயம் வெளியே பறவியதையடுத்தே அங்கு பொது பல சேனா உறுப்பினர்கள் பெரும்
கூட்டத்தினருடன் வருகை தந்து ஆட்பாட்டம் செய்து பாடசாலையை நோக்கி வந்தனர்.
ஆனால் அவர்கள் பாடசாலை உள்ளே நுழையமுன்னே பிரதமர் டீ.எம்.ஜயரத்ன மற்றும்
அவருடைய மகன் மேல மாகாணசபை உறுப்பினர் அனுராத ஜயரத்னவும் அங்கு வருகை
தந்ததையிட்டு இரு குழுக்களுகுமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சிறு
கைகளப்பும் ஏற்பட்டது. பின் எவ்வித விபரீதங்களம், சேதங்களமின்றி களைந்து
சென்றுள்ளனர்.
இறுதியில் பிரதமர் அவர்கள் ஒரு
கூட்டமொன்றுடன் ஆட்பாட்டத்தை ஆரம்பித்து ‘இங்கு நாம் இனமோதல்களை உருவாக்க
விடமாட்டோம்’ ‘இது தவறான செயற்பாடுகள் ஆகும்’ என பெரும் ஆவேச வார்த்தைகளைக்
கூறி முடித்தார். ஆதன் பின் இல்லவத்துறை, கஹட்டபிடிய போன்ற முஸ்லிம்
கிராமங்களினூடாகச் சென்று பாதைகளில் இருந்த முஸ்லிம் மக்கள் பலருடனும்
பேசிவிட்டுச் சென்றதாக தெரியவருகிறது.
Post a Comment