மன்னார்
மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர், யுவதிகளின் எதிர்கால நலனை
கருத்திற்கொண்டு, தொழில் வாய்ப்புக்கான உயர் கல்வி வழிகாட்டிக் கண்காட்சி
இன்று வெள்ளிக்கிழமை (16) காலை ஆரம்பமாகியது.
மன்னார் பெமிலியன் உளநல புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடனும் மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடனும் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உளநல புனர்வாழ்வு மையத்தில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி, நாளை சனிக்கிழமைவரை நடைபெறும்.
இந்தக் காண்காட்சியின்போது, தொழில்வாய்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இளைஞர், யுவதிகளுக்கு கொழும்பில் உள்ள பிரபல கல்வி நிறுவன அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இன்றைய நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், மன்னார் சிறிய குருமட இயக்குநர் அருட்தந்தை சேவியர் குரூஸ், கல்முனை மாநகர சபையின் முன்னால் மேயர் எம்.சிராஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment