நவநீதன் பிள்ளையிடம் நாட்டுக்கெதிராகப் போட்டுக் கொடுத்தார், என்று தற்போது
பல முனைகளிலிருந்தும் ரவூப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்பட்டு வருகின்றது. இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்களில் ஹெல
உறுமயக்காரர்களும், அமைச்சர் விமல் வீரவங்ச அணியினரும் முன்னணியில் இருந்து
வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இலங்கையின் நீதித் துறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள்
தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார் என்று கடந்த வெள்ளிக்கிழமை
ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரரேரனை பற்றிய
சந்திப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.
தற்போது சட்டத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த நடவடிக்கைகளில் இறங்கி
இருக்கின்றனர். ஹக்கீம் விரோத அரசியல்வாதிகள் அவரை அமைச்சரவையில் இருந்து
வெளியேற்றுமாறுதான் கோரிவருகின்றார்கள். ஆனால் இலங்கை சட்டத்தரணிகள்
சங்கத்தின் தேசிய ஒன்றிய அமைப்பாளர் சட்டத்தரணி கபில கமகே, ஹக்கீமின்
குடியுரிமையை ரத்தச் செய்ய வேண்டும். நீதி அமைச்சராக இருந்து கொண்டு அவர்
மேற்கொண்ட நடவடிக்கை மிகப்பாரதூமானவை -தேசத்துரோகமாவை என்று சுட்டிக்காட்டி
இருப்பதுடன், இலங்கை அரசியல் யாப்பின் ஆறாம் சரத்தின் படி ஹக்கீம் மீது
நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவரது இந்தக் கருத்து அவரது தனிப்பட கருத்தா அல்லது அமைப்பு ரீதியான
கருத்தா என்று அறிந்து கொள்ள அவருடன் பலமுறை தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள முயற்சித்தாலும் இணைப்புக் கிடைக்கவில்லை.
அமைச்சர் ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை இந்த இது தற்போது அரசியல் மேடைப்
பேச்சுக்களுக்கு நல்ல தலைப்பைக் கொடுத்திருந்தாலும், இது எவ்வளவு தூரம்
அவரது கட்சிக்கு வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்க உதவும் என்று
தெரியவில்லை.
எமக்குக் கிடைத்த தகவல்களின்படி ரவூப் ஹக்கீம் மீது மஹிந்த ராஜபக்ச
சந்திரிக்க பாணியில் தற்போதய நிலையில் எந்த நடவடிக்கையையும்
எடுக்கப்போவதில்லை என்பது உறுதி. அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் பசில்
ராஜபக்ச மற்றும் அமைச்சர் டலஸ் அலகப்பெருமாவும் இந்த விடயத்தை அதாவது
ஜனாதிபதியின் பேச்சை பெரிது படுத்த வேண்டியதில்லை என்று ரவூப் ஹக்கீமிடம்
தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்திருந்தமை தெரிந்ததே. அரசியல் என்றால்
இப்படித்தான்.
இந்த ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் எல்லோரையும் தட்டித்தான்
வைத்திருக்கின்றார். எனவே சிந்தனையாளர் ராஜாங்கத்தில் எவருக்கும் துள்ளிக்
குதிக்க முடியாது. அதனால்தான் அமைச்சரவையில் எல்லோரும் செல்லாக்காசு என்ற
அந்தஸ்த்து இன்று. இப்படி ஏதாவது வேலை பார்த்து மேர்வின் சில்வா பாணியில்
ஏதாவது விளம்பரத்தை - பிரச்சாரத்தைத் தேடிக் கொண்டால் மட்டும்தான்
அவர்களும் அமைச்சரவையில் இருக்கின்றார்கள் என்பது மக்களுக்குத்
தெரியவருகின்றது.
கிங்மேக்கர் கதைகள் எல்லாம் பழங்கதைகள். அவை அஸ்ரஃப், தொண்டா காலத்துக் கதைகள், என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment