.jpg)
கல்முனை மாநகர சபையானது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் இல்லாத ஒரு மாநகர சபை என இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தரான ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்திருப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் அமைகின்றது.
காலநிதி சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி முதல்வர் என்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயர் முதல்வர் என்றும் திங்கள்கிழமை வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தர் மேற்படி பதவிகள் இன்னும் வர்தாமனியில் அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப் என்றும் முதல்வர் நிசாம் காரியப்பர் என்றும் அலுவலக நடைமுறைக் கடிதங்களில் பாவித்துள்ளார்.
அண்மையில் சிராஸ் மீராசாஹிபுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள “கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் – டிசம்பர் 2013” இற்காக அழைப்பு கடிதத்திலும் சிராஸ் மீராசாஹிபினை கௌரவ கல்முனை மாநகர பிரதி முதல்வர் எனக் குறிப்பிட்டுள்ளதோடு அவ்வறிவித்தல் கௌரவ முதல்வரின் கட்டளைக்கு அமைவானது எனவும் குறிப்பிட்டு ஆணையாளரின் ஒப்பமிடப்பட்டுள்ளது.
அத்தோடு பிரதி முதல்வருக்கான பொறுப்பேற்கும் கடிதத்தினை திங்கட்கிழமை (23) காலை சிராஸ் மீராசாஹிபிடமிருந்து பாரமெடுத்ததோடு பிரதி முதல்வருக்கான பிரத்தியேக அறையினையும் வழங்கியுள்ளார். இச்செயற்பாடானது இவரது இச்செய்திக்கும் நடைமுறைக்கும் பொருத்தப்பாடில்லாமல் காணப்படுகிறது. பொறுப்பு வாய்ந்த பாவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற விதத்தில் நடத்து கொள்வதனையே இது காண்பிக்கின்றது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிசாம் காரியப்பரை முதல்வராகவும் சிராஸ் மீராசாஹிபை பிரதி முதல்வராகவும் சிபாரிசு செய்து தேர்தல் செயலகத்திற்கு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
Post a Comment