அம்பாறை நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் நுழையும் அதிரடிப்படையினர்
அங்கு அட்டகாசங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிதித்து நேற்றைய தினம் கர்த்தால்
மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.
இன்றும் இராண்டாவது நாளாக கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியை இடைமறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள்மீது பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை முற்கொண்டனர். இதற்கு எதிராக மக்கள் பொலிசார்மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக இண்டாவது நாளாகவும் இந்தப் பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்திற்குள் நுழையும் அதிரடிப்படையினர் இரவு வேளையில் கிராமங்களில் ஆட்சி புரிந்து அட்டகாசம் செய்வதாகக் குறிப்பிடும் மக்கள், வீடுகளுக்கு கல் எறிதல், கதவுகளைத் தட்டுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக குறிப்பிட்டதுடன் இரவு வேளைகளில் தாம் அச்சதுடன் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பதுகாப்புப் படையினர் என தம்மை அறிவித்துக் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நடவடிக்கைகள் ஈடுபடும் இந்தச் செயலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் யாரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிபிடுகிறார்கள்.

Post a Comment