
கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை தொடர்ந்து மேயர் சர்ச்சை நிறைவுற்று புதிய மேயராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பழிவாங்கல் தொடர்வதானது கல்முனை பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் சிராஸ் மீராசாஹிபினால் நியமனம் செய்யப்பட்ட பலர் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் மேயரால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பழிவாங்கப்பட்டபோது அதனை கடுமையாக கண்டித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பி ஆகியோர் எந்தவொரு பழிவாங்கல்களுக்கும் இடம்கொடுக்க கூடாதென மாநகர சபை ஆணையாளரை பணித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் மாநரகர சபைக்குள் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அத்துமீறி நுழைந்த புதிய மேயரின் எடுபிடி மாநகர சபை பெண் ஊழியர்கள் இருவரை மிகவும் கேவலமாக தூற்றியதுடன் ஒருவரிடம் இருந்த பொறுப்புக்களையும் பலவந்தமாக பறித்தெடுத்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் குறித்த இரண்டு ஊழியர்களும் இன்று (27ஆம் திகதி) வேலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அறியவருகிறது. மேற்படி நிகழ்வுகளின் ஒலிப்பதிவுகள் ஊழியர் ஒருவரிடம் இருப்பதாகவும் தெருவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஊழியர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க முன்னாள் மேயரினால் நியமிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிவந்த மற்றுமொரு ஊழியர் கடந்த 2013.11.22 ஆம் திகதியிடப்பட்ட மாநகர ஆணையாளரின் கடிதத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை இன்னுமொரு ஊழியருக்கு கொடுக்கப்பட்ட நெருக்குதல்களினாலும் ஏற்பட்ட அவமானத்தினாலும் கடமைக்கு வருகை தராமல் உள்ளார். இதேபோன்று முன்னாள் மேயரினால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் நெருக்குதல்களையும் அவமானங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் அவர்களாகவே வேலையிலிருந்து நீங்கிக்கொள்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேற்படி மேயரின் எடுபிடியின் செயல்களுக்கு உதவியாக கல்முனை மாநகர சபையின் உள்ளூராட்சி உதவியாளர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குறித்த ஊழியரின் அறையில்தான் மேற்படி எடுபிடி அமர்ந்திருந்து பழிவாங்கும் செயற்பாட்டினை திட்டமிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்துக்கும் புதிய மேயரின் குறித்த எடுபிடியே காரணமென சபை உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இப்பழிவாங்கல்களும் அவமானங்களும் தொடர்ந்து எடுபிடியினால் மேற்கொள்ளப்படுமாயின் மாநகர சபை ஊழியர்கள் ஒன்று திரண்டு புதிய மேயருக்கு எதிராக ஆர்பாட்டமொன்றை நடத்த வேண்டி வருமென ஊழியர்கள் குறிப்பிடுகின்றன
Post a Comment