Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

Wednesday, October 20 comments

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (01.10.2013) காலை சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தலைமையில் நடைபெற்றது.

“கல்வி கற்கும் உரிமை எங்களுக்கு உண்டு”, “இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்”, “சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்”, “என் தலையெழுத்தை என்னை தீர்மானிக்க விடுங்கள்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தி முன்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். இவ்வூர்வலத்தில்  முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஶ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி அருகாமையில் ஆரம்பித்த இவ்வூர்வலம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தை அடைந்து, பின்னர் கல்முனை மாநகர சபையினை வந்தடைந்தனர். இதன்போது இவர்களை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வரவேற்று இம்மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கிவைத்தார்.

இதன் பின்னர் இவ் ஊர்வலம் நகர மத்தி ஊடாக கல்முனை நகரின் பிரதான பிரதேசங்களுக்கு சென்று மீண்டும்  ஶ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளியை அடைந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by