பொதுநலவாய
நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை முன்னிட்டு
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் பொது விடுமுறை வழங்கப்பட
உள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இது பற்றிய முறையான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய நாடுகளின் பிரதான தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குன (தாமரை தடாகம்) மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் அந்த மண்டபம் அமைந்துள்ள பிரதேசத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட உள்ளன.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்துக்கு பதிலாக அவரது மகன் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
மாநாடு நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment