கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று
(27.10.2013) மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை
மாநகர மேயர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது மக்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து மாநகர மேயர் சர்ச்சை
தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுச் செயற்படுமாறு மேயர் சிராசை
வேண்டிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மிக விரைவில் பிரமாண்டமான மக்கள்
சந்திப்பொன்றை நடாத்தி மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப
செயற்படுவதாக மேயர் சிராஸ் தெரிவித்தார்.
Post a Comment