
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற மோதல் மற்றும் வன்முறைகளைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாடசாலையின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் யாவும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இதன்போது மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறி கல்முனை பிரதான வீதியூடாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரை பல்வேறு கோஷங்களுடன் பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர்.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.


Post a Comment