ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர்
றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு
ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.அரபாத் மற்றும் மாந்தை பிரதேச சபை
உறுப்பினர் ஏ.ஆர்.ரவ்பிக் ஆகிய இருவரே இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸில் இணைந்துகொண்டவர்களாவர்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் பட்டியலில் வட மாகாண சபையில் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம், தம்பபண்ணி
பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவர்கள் இணைந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
.
Post a Comment