Homeநாம் வாழவேண்டும் என்றால் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது ; சம்பந்தன்
நாம் வாழவேண்டும் என்றால் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது ; சம்பந்தன்
(vi)
ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது. அது உண்மை ஆனால் நமது போராட்டம்
ஆயுதப் போராட்டம் போன்று முடிவடைய முடியாது. எமது போராட்டம் ஒரு
நியாயமான போராட்டம், நீதியான போராட்டம். இந்த மண்ணில் நாம் வாழ
வேண்டும். நீங்கள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பேரப்பிள்ளைகள் இந்த
மண்ணில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது.
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பாடுகளில் ஈடுபடும் போது
நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன் என்று
தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் அடம்பன் பிரதேசங்களில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் வன்னி
பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தலைமையில்
இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை
தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ
விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.பிக்களான
எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், ப.அரியநேத்திரன், மற்றும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காந்தா, நல்லிணக்கத்திற்கான மக்கள்
இயக்க தலைவர் எம்.பி.எம்.பிர்தௌஸ் ஆகியோருடன் மன்னார் மாவட்ட தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் 8 பேரும் கலந்து கொண்டு மேடையில்
உரையாற்றினர்.
இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் தொடர்ந்து பேசுகையில்:
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும்
முஸ்லிம் மக்களுக்கும் தங்கள் உரிமைகள் இல்லாமல் போயுள்ளன. எனவே இந்
நாட்டின் ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும். சமஷ்டி ஆட்சிமுறை மலர
வேண்டும். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் தமிழ்இ முஸ்லிம்
மக்களுக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்து
நீண்டகாலமாக போராட்டம் ஒன்று நடைபெற்றது.
அதுவும் அரசியல், ஜனநாயக போராட்டமாக நீடித்தது அத்துடன் பண்டார
நாயக்காவுடனும் டட்லியுடனும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தந்தை செல்வா வடகிழக்கு பகுதிகளில் எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
அன்று முஸ்லிம் தலைவர்கள் தமிழரசுக்கட்சியின் சார்பில்
போட்டியிட்டு வெற்றியீட்டினார்கள். கிழக்கு மாகாணத்தில்
பொத்துவில், கல்முனை ஆகிய பகுதிகளில் இத்தகைய வெற்றிகள்
பெறப்பட்டன. ஆனால் எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் வெற்றி
பெறாமையினால் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் முஸ்லிம் தலைவர்கள் நாட்டை ஆளும் பெரும்பான்மை இனத்தவர்களோடு
சேர்ந்தால்தான் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என
நினைத்தார்கள்.
ஆனால் தற்போது நிலவும் நிலைமைகளை அவதானிக்கின்ற போது முஸ்லிம்
தலைவர்கள் தாங்கள் இருக்கும் நிலை சரியா, பிழையா என
சிந்திக்கத்தொடங்கியுள்ளனர். முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது
நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து உரிமைகளை பெறலாம் அல்லது
பாதுகாக்கப்படலாம் என்ற நிலைப்பாட்டில் ஐயப்பாடு தோன்றியுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியிலே ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியம். இன்று
இலங்கை அரசாங்கம் எத்தனிக்கின்றது தமிழ் மக்களை பிரிப்பதற்கு.
தமிழர்களுக்கு, சில வசதிகள்இ தகுதிகள் வேலைவாய்ப்புக்களை கொடுத்து
அவர்களுடைய வாக்குகளை பெறுவதன் மூலமாக தமிழ் மக்களின் ஒற்றுமையை
குலைக்கலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது.
நாங்கள் எல்லோரும் பௌத்த பெரும்பான்மையினரை மதிக்கின்றோம் ஆனால்
இவ்விதமான செயற்பாடுகளில் ஒரு அரசாங்கம் ஈடுபடுவது நிச்சயமாக
இது மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தும் விடயமல்ல.
ஆயுத
போராட்டம் முடிவடைந்து விட்டது அது உண்மை. நமது போராட்டம் ஆயுத
போராட்டம் போன்று முடிவடைய முடியாது. நமது போராட்டம் ஒரு நியாயமான
போராட்டம். நீதியான போராட்டம் இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும் நீங்கள்
உங்கள் பிள்ளைகள்இ உங்கள் பேரப்பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ வேண்டும்
என்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது. இந்த தேர்தலில் தமிழ்
மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள்
அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள்.
Post a Comment