புல்மோட்டை பிரதேசத்தில் மீண்டும் பொது
மக்களின் பரம்பரைக் காணிகளையும், அனுமதிப்பத்திர மற்றும் உறுதிக்
காணிகளையும் நில அளவையாளர்கள் கடந்த 09.09.2013 ஆம் திகதி நில
அளவையிட்டனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து, ஏன் காணிகள் அளவை செய்யப்படுகின்றன என்ற கேள்விக்கு, “பூஜா பூமிக்காக இப்பிரதேச காணிகள் அளவிடப்படுகின்றன” என்ற
அரச நிலஅளவையாளரின் பதிலுக்கு பொதுமக்கள் எதிர்பு தெரிவித்ததுடன் சம்பவ
இடத்திற்கு அரசியல் பிரமுககர்களையும், ஜம்மியத்துல் உலமாவினரையும்
அழைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர், குச்சவெளி பிரதேச சபை பிரதி
தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையினர் ஆகியோர்
விஜயம் செய்து நிலஅளவையாளரை சந்தித்து மக்களின் அவல நிலை குறித்து விபரித்த
வேளை மக்களுக்கும் இவர்களுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் நிலஅளவைகளை இடை நிறுத்திய
நிலஅளவையாளரகள், நிலஅளவை மேற்கொள்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.
அவ்வாறு தடை செய்தால் நாங்கள் உங்கள் அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை
எடுப்போம் எனக் கூறினர்.
பின்னர் அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு
சென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபை
பிரதி தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், புல்மோட்டை பெரிய பள்ளிவாயலின் தலைவர்
கலீல் லெப்பை, RDS உறுப்பினர் அய்னியப்பிள்ளை மற்றும் ஜம்மியதுல் உலமா சபை
உறுப்பினர் ஐயுப்கான் மௌலவியும் எங்களது கடமைகளுக்கு பங்கம்
விளைவிக்கின்றனர் என்ற முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் சந்தேக நபர்களை கைது
செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர் இருப்பினும் அவர்கள் (2013.09.10) இன்று
திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன் முன்னிலையில் தோன்றி
தமது எதிர் வாதங்களை முன்வைத்தனர். அதனைக் கேட்டறிந்த நீதிபதி ஐவருக்கும்
தலா 10,000/ ரூபாய் சரீரப்பினையில் செல்லவும் எதிர் வரும் 18.09.2013ஆம்
திகதி வரையும் வழக்கை ஒத்திவைத்தார்.
98% முஸ்லிம்களை பூர்வீகமாக கொண்ட
புல்மோட்டையில் பூஜா பூமி பிரதேசத்துக்காக காணிகள் என்ற போர்வையில்
முஸ்லிம்களின் காணிகள் அளவிடப்படுவதை இப்பிரதேச அனைத்து அரசியல்
பிரமுகர்கள், பொது நிறுவனங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள்
எதிர்ப்பதுடன் அதனை உடனடியாக நிறுத்துவதற்கு புத்தசாசனம் மற்றும் மத
அலுவல்கள் அமைச்சு துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்
இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் இப்பிரதேச
மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment