
தலைவா நம் விடியலுக்காய் வித்திட்டு
நட்டிய மரம் ஒய்யார வளர்ந்தும் வித்துப்
பிழைக்கும் மாமரமாய் ஆகி..
மண் வாசனை அறியா மந்திரிமார்கள்
பொன்னுக்காய் பிரித்து பல கிளைகளாய்
புரியா கட்சிகளை உண்டாக்கி…
புகழ் வேண்டும் என்று பதவிக்காய்
இதழ் சிரித்து இன்பம் காண்கிறார்களே..!
பட்ட மரம் கல்லெறி படுவது போல்
பச்ச மரம் பொல்லெறி படுகிறதே..!
முஸ்லிம் தனித்துவத்துக்காய் தனி
மரம்வேண்டும் என்று கிழக்கில் நட்டிய மரம்
இன்னும் பூக்கவில்லையே…!
தலைவா…!
ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன்
நமது மரம் வாழவேண்டும் – அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்…! என்று சொன்னாய் ….
ஆம்,ஆயிரம் விழுதுகளுடன் வாழ
வேண்டும் என்றாய் ! இன்று ஆறாயிரம்
விருதுகளுக்காய் போட்டி போடும் நம்
தலைமைகள் …!
இந்த மரத்தை எங்கு வெட்டி,
விழுத்தாட்டப் போகிறார்களோ என்ற பீதியுடன்,
அந்த கிழக்கில் உதித்து மேற்கில் புதைத்த தலைவனுக்கு
நாம் கொடுக்கும் பரிசு பூக்காத இந்த மரமோ…!
நம் சமூகம் காய்,கனிகளை உண்டு ஒன்றாய்,
அம் மரத்தின் நிழலில் ஓய்வு எடுப்பார்கள்
என்று எண்ணினோம்….!
எங்கே இவர்கள்தான் இன்னும்
பூக்கவே விடவில்லையே…..!
பட்டுப் போகும் அந்த மரத்த,,
பத்துப் பேரேனும் சேர்ந்து தண்ணீர் ஊற்ற
புறப்படுங்கள் எம் முஸ்லிம் தலைவர்களே!
Post a Comment