சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன
தயாரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை கைது செய்யுமாறு களுத்துறை
நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் அருனு அழுத்கே பிடிவிறாந்து
பிறப்பித்துள்ளார்.
மாகல் கந்தே பஞ்ஞாலோக தேரர், மாகல் கந்த சுனந்த தேரர் மற்றும் சோபித தேரர் ஆகியோரே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏனைய தேரர்களாவர்.
2013.08.01 ஆம் திகதியன்று மகேகொன பிரதேசத்தில் சிங்கள ராவய அமைப்பு
பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. எனினும் அக்கூட்டம்
நடத்தப்படும் பட்சத்தில் பிரதேசத்தில் பதற்றம் ஏற்படும் என பயாகல பொலிஸார்
நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தனர். இன் நிலையில் அதனை ஆராய்ந்த கழுத்துரை
மேலதிக நீதவான் ஆய்ஷா ஆப்தீன் அக்கூட்டதை நடத்த தடை விதித்தார்.
Post a Comment