
கிரான்பாஸ் விவகாரத்தைக் கையில் எடுத்திருந்த டி.என்.எல் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று தற்போது நிறைவுபெற்றுள்ளது.
முஸ்லிம்கள் சார்பில் அசாத் சாலி,
முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் பதியுதீனின் கட்சி சார்பாக செயலாளர் ஹமீத்
என்பவரும் கலந்து கொண்ட அதே வேளை கிரான்பாஸ் விஹாராதிபதி உட்பட போகலஸ்ஸ
அநுருத்த தேரரும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது சர்ச்சைக்குள்ளாகிய கிரான்ட்பாஸ்
பள்ளிவாசல் குறித்த இடத்தில் இயங்குவதற்கான அனுமதி பெறப்படவோ அல்லது அது
பள்ளிவாசலாக இயங்குகின்றமையோ தமக்கு அறிவிக்கப்படவோ இல்லையென விஹாராதிபதி
தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டபோதும், இறுதியில் நாட்டில் தற்போது சட்ட
ஒழுங்கு கெட்டுப்போயிருப்பதால் அதனை சீர் செய்வதற்கான தேவையே
மேலோங்கியிருப்பது என்பதும் அதே வேளை இவ்வாறான இன ரீதியிலான
குழப்பங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் எடுக்கவேண்டும் எனவும்
அரசின் அலட்சியப்போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நிலவுகின்றன எனவும்
அனைத்து தரப்பும் இணங்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமூகம் சார்பான வாதங்களை சரியான முறையில்
முன்னெடுத்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மற்றும் அசாத்
சாலி வழமைபோன்று சரளமான சிங்களத்தில் மிகத் தெளிவாக விடயங்களை
எடுத்துரைத்தமை வாதத்தின் பலத்தை மாத்திரமன்றி தேவையான உண்மைகளையும்
எடுத்துக்கூற ஏதுவாக இருந்தமை சுட்டிக்காட்டப்படவேண்டிய அதேவேளை பங்கெடுத்த
மூவருக்கும் சமூகம் சார்பான நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Post a Comment