
இஸ்லாம் கட்டுக்கதைகள்,புராணக்கதைகள்
இல்லாத ஒரு எழிதான அல்குர்ஆன் ,ஹதீத் அதன் அறிவுரைகள் சார்ந்த ஓர் ஒப்பற்ற
நெறி, தொண்டு தொட்டு ஒரே குறிக்கோளான இஸ்லாமும் அதன் கோட்பாடும் ஒன்றாகவே
இருந்தது அன்றைய சஹாபாக்கள்,தோழர்களிடத்தில் கொள்கை ரீதியாகவோ ஜமாஅத்
ரீதியாகவோ பிழவுகள் ஏற்படவில்லை,அற்ப சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரே குழுவாக அல்லது ஜமாஅத்தாக இருந்தார்களே தவிர பிரிவினை வாதம் பேசவில்லை
என்பது தெளிவு.
சமகாலத்தில் காணப்படுகின்ற பேதங்கள் போல்
கட்சி ரீதியான,கொள்கைரீதியான ,தலைமை ரீதியான பிரிவுகள்,பிளவுகள்
காணப்படவில்லை ஏன் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூட பிரார்த்திக்கும்போது
முஸ்லிம் உம்மத் என்றுதான் கேட்டிருக்கிறார்கள்.
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக (2:128)
நபி இப்ராகிம் (அலை) அவர்கள்
பிரார்த்தித்த போதனை என்றும் நமக்குள் ஊறி இருக்க வேண்டுமே அல்லாமல் எனது
கோத்திரம்,குளம் ,கோட்பாடு என்றெல்லாம் வாதம், பிரதி வாதம் என்பனவற்றை
எரிந்து விட்டு முஸ்லிம் என்ற நாமத்தை மொழிவோம்.பொதுவாக எல்லா இடங்களிலும்
உம்மதுன் வாகிதா,உம்மதுன் வசதத்,முஸ்லிம் என்றும் நடு நிலையாகத்தான்
சொல்லப்பட்டு இருக்கிறது.
நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்." 2:132
தமிழில் "நீங்கள் முஸ்லிம்களாகத்தான் மரணிக்க வேண்டும்" என்று கூறப்படுவதற்கு அரபியில் "நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்" என்று பொருள்படுகிறவார்த்தைகள் பயன்படுத்தப்படும்.
மேலும் இவ்வசனம் அழகான ஒரு பொதுவான
போக்குடைய நாம் ஒரு முஸ்லிம் கூட்டமாக இருக்க,வாழ வேண்டும் என்பதை கூற
வருகிறதென்றால் வெள்ளிடை.மாறாக நீர் அந்த கொள்கை சார்ந்தவனாக அன்றி மரணிக்க
வேண்டாம் என்று எங்கேயும் திண்ணமாக குறிப்பிடப்படவில்லை என்பதும் எமக்கு
தெளிவு.
'நபி அவர்களுடன் நான்(ஸல்)
அமர்ந்திருந்தபோது, நபிஒரு குழுவினருக்குக் கொடுத்தார்கள்.
ஒருவரைவிட்டுவிட்டார்கள். அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது
நான், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் அவரைவிட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது
ஆணையாக அவரை நான் இறைநம்பிக்கையாளர் என்றே கருதுகிறேன்' என கேட்டதற்கு,
'அவரை முஸ்லிம் என்றும் சொல்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்." அறிவிப்பாளர் ஸஅத்(ரலி).
இறை நம்பிக்கையாளன் என்று கூட சொல்லாமல்
முஸ்லிம் என்ற வார்த்தை மாத்திரம் உபயோகிக்க வேண்டும்என்பது எமக்கு இன்று
ஒரு நல்ல சான்று,பிரிவினை வாதத்தை களைந்து எரிந்து விட்டு முஸ்லிம் என்ற
நாமத்துடன் ஒன்று பட்டால் திண்ணமாக இலங்கையில் மாத்திரமன்றி முழு
சாம்ராஜ்யத்தையும் வென்றெடுக்கலாம்.
இமாம்களிடத்தில் கூட மாறுபட்ட
கருத்துக்கள்,போக்குகள் இருந்தன ஆனால் அவர்கள் ஒருபோதும் இவற்றை பற்றிப்
பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை மாறாக குரான் ஹதீதுக்கு மாற்றமாக
இருந்தால் தூக்கி வீசிங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.(3:52)
ஹலாளில் தொடங்கி பள்ளிவாயல் தாக்குதல்
முதல் பிறை வரைக்கும் சர்ச்சையை ஏற்படுத்தி அ.இல.ஜ.உ இல்லாதோளிப்பதற்கண
அரங்கேற்றமாக கூட இருக்கலாம்,நாம் இதனை மிக நுண்ணியமாக,நுட்பமாக சிந்திக்க
வேண்டும.''புலி பசிச்சாலும் புல் தின்னாது'' என்ற வரட்டு
முரட்டு,பிடிவாதங்களை அவிழ்த்து எரிந்து விட்டு ஐக்கியம் எனும் ஒருமைப்
பாட்டுடன் இணைந்து நம் சமூகத்திற்காக ஒன்று படுவோம.
கோட்பாடு,கொள்கை,குளம்,கோத்திரம் என்ற
பிரிவினை வாதத்தை தூக்கி வீசிவிட்டு நான் எனும் நீயும் முஸ்லிம் என்ற ஒற்றை
வாக்குடன் சேர்ந்து சமகால இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் கை
ஆழ்வதற்கான வழி முறைகளையும்,பொறி முறைகளையும் கண்டு பிடிப்போம்.
'கருத்து
வேறுபாடென்னும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரளிக்கும்..!
மிகவும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்' (எம்.எச்.எம்.அஷ்ரஃப் )
இஸ்லாம் மற்ற மதங்களை விடவும் அளப் பெரும்
அன்பு,ஐக்கியம்,ஒற்றுமைப்பாடுடன் தொடர்புள்ள ஒரு வழி கருத்து
வேறுபாடுகள்,முரண்பாடுகள் வரலாம் கறையான்கள் வந்து புத்து (கூடு) வைக்கு
முன் வாருங்கள் முஸ்லிம் எனும் ஒரு நாமத்துடன் புறப்படலாம்.
Post a Comment