
கண்டி,கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்துவைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீதுநேற்று (20.8.2013 மாலை) தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார்.
(நேற்று 20) மாலை அலுவலகத்திற்குள் புகுந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றுஅலுவலகத்தை தாக்கியதாகவும் அப்போது அங்கு வீட்டிருந்த தனது சகோதரரான மொஹமட் சியான் என்பவர் கடுமையாக காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர் அங்கும்புறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் மேலும் தெரிவித்தார். இத் தாக்குதலின் போது அலுவலகத்திலிருந்த உடைமைகளுக்கு பாரியசேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இக் காரியாலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதிஅமைசச்ருமானரவுப் ஹகீம் கடந்தஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment