கிரண்பாஸ் பகுதியில் அமைந்திருந்த பழைய பள்ளிவாசலிலேயே இனிமேல் தொழுகையில்
ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு
அறியவருகிறது.
இன்று 11-08-2013 பிந்நேரம் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் பழைய பள்ளிவாசலில் அருகிலுள்ள அரச மரத்தை கொழும்பு மாநகர சபை
மூலமாக வெட்டுவதற்கும், முன்னர் அப்பகுதியூடாக முன்னெடுக்கவிருந்த
வாய்க்கால் திட்டத்தை கைவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை
திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து வழமை போன்று பழைய பள்ளிவாசலில்
தொழுகைகள் நடைபெறுமெனவும் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

Post a Comment