
அரசாங்கம் சிரேஷ்ட அமைச்சர் பதவிகளை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சிரேஷ்ட அமைச்சர் பதவிகளை ஏற்படுத்தியதன் மூலம் எதிர்பார்க்கப்பட பலன் கிடைக்கவில்லை என்பதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாம் தவணைக்கான பதவியேற்பின் போது, சிரேஷ்ட அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டதுடன் 10 பேர் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
அனுபவம், சிரேஷ்டத்துவத்தை கொண்டுள்ள இந்த அமைச்சர்களிடம் இருந்து ஆலோசனைகள் மற்றும் உயர்மட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்த போதும், அவர்களிடம் இருந்து அப்படியான எந்த பயன்களும் கிடைக்கவில்லை.
சிங்கப்பூரில் சிரேஷ்ட அமைச்சு பதவிகள் நல்ல பயனை கொடுத்துள்ளது. எனினும் இலங்கையில் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் காட்டி வரும் ஊதாசீன போக்கினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் மூத்த அரசியல்வாதிகள் தமக்கான துறைகள், சிறப்புரிமைகள் வழங்கப்படாத காரணத்தினால் அதிருப்தியடைந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment