Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பசிரின் தொடர்ச்சியான துரோகங்கள்- முஸ்லிம் காங்கிரஸிட்கு

Thursday, August 150 comments

 -       Ku;rpj; -
வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்படுகின்ற போது, அரசியலை ஓரளவுக்கு அவதானிக்கிறவர்கள் எல்லோருக்கும் விளங்கி இருக்கும், சிறுபான்மைக் கட்சிகளில் ஏதாவது ஒன்று பலிக்கடாவாக்கப்படப் போகிறது என்று. அந்தவகையில் இலகுவான இலக்காக இருந்தது முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான். ஏன் எனில், தமிழர்களின் கட்சிகள் யாவும் ஒரே அணியில் திரளுவதை தடுக்குமளவுக்கு இந்த அரச இயந்திரத்திற்கு சக்தியும், அரசின் அமைச்சுப் பதவிக்கு சோரம் போகும் தலைவர்களும் தமிழர்களில் இல்லை. அதனால், முஸ்லிம் காங்கிரஸ்தான் இலகுவான இலக்காக அமையப் போகிறது என்பதும், அதற்கான அடித்தளமாக தான் அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு ஏற்கனவே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்பதும் வெளிப்படையாக விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தது.

முஸ்லிம் காங்கிரஸை உடைக்கும் அரசாங்கத்தின் இலக்கும், அதே போன்று அதற்கான நபராக பஷீரைத் தேர்ந்தெடுத்ததும் இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டது. பஷீர், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவரை தனது பசப்பு வார்த்தைகளினூடாகக் கவர்ந்து, அரசாங்கத்துக்குள் போய் அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்வோம் என்று ஆசையூட்டி, அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்னூடாக அரசாங்கத்தில் இணைய நினைத்தார்.

 இவ்விடயத்தை தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசன் அலி போன்றோரும் இருந்த கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிவித்தார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - வந்தாலும் வராது விட்டாலும் - நான் அரசாங்கத்துக்குள் போகப் போகிறேன் என்பதை அச்சுறுத்தும் பாணியில் கூறினார். இதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெறுவதை ஊர்ஜிதப்படுத்திய றஊப் ஹக்கீம் நாமல் ராஜபக்ஷ ஊடாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதனூடாக கட்சி உடைவதை சாமர்த்தியமாகத் தவிர்த்தார்.

அதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் மிகப்பெரும் விலையாக, 18வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்காமால் விட்டிருந்தால், அன்றைய நிலையில் அரசிற்கு 2/3 பெரும்பான்மை கிடைத்திருக்காது போயிருக்கும். இன்று நாட்டில் நிலவும் எதேச்சதிகார அரசியலுக்கு 18வது சரத்து முக்கிய காரணம் என எல்லோராலும் விமர்சிக்கப்படுவதும், அதற்காக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸை குற்றம் கூறுவதும், இந்த பஷீர் என்ற தனிமனிதனின் அமைச்சுப் பதவி மீதான ஆசையினால் தான் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
  
அதே போன்றே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வந்த போது, செயலாளர் ஹஸன் அலி போன்றோரும் அதிகமான உயர்பீட உறுப்பினர்களும், அனுராதபுரம் மற்றும் தம்புள்ள பள்ளிவாயல்கள் உடைப்பைத் தடுக்கத் தவறிய அரசாங்கத்தோடு கூட்டுச் சேராமல், தனித்துக் கேட்கும் நிலைப்பாட்டில் இருந்தனர். ஆனால், பஷீர் அரசோடு கூட்டுச் சேர்ந்து கேட்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். அரசதரப்பு, அதாஉல்லா மற்றும் றிஷாட் போன்றோரின் ஆலோசனையை கேட்டு, முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆசன ஒதுக்கீட்டில் வஞ்சகம் செய்ய முற்பட்ட போதும், பஷீர் அரசோடு சேர்ந்து கேட்பதிலேயே குறியாய் இருந்தார். ஆனால், அவரை மீறி கட்சி தனித்தே போட்டியிடும் முடிவுக்கு வந்தது.

அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்று, யார் ஆட்சி அமைப்பதானாலும் முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்த போது, அரசாங்கத்தோடு மட்டுமே  பேச்சுவார்த்தை நடத்துவதில் பஷீர் கவனமாய் இருந்தார். இறுதியாக முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய குழுவுக்கு தலைமை தாங்கி, அரச உயர்மட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியவரும் பஷீர் தான். எங்கே முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அது அவருடைய ஊரைச் சேர்ந்த ஹாபில் நஸீருக்கு கொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தாலும், அத்தோடு தன்னுடைய அரசியல் ஸ்தம்பித்துப் போகலாம் என்ற விளிப்புணர்வினாலும், முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து, அதனைச் சாதித்தும் காட்டினார்.

பின்னர், பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இது சிறுபான்மை இனத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படாத விடயமாகவும், முறைகேடானதாகவும் இருக்கின்ற காரணங்களினால், வாக்கெடுப்பில் கலப்பது தொடர்பில் கட்சி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், இதற்கான பிரேரணை முன்மொழிவில் முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் கையொப்பமிடுவதில்லை என்ற முடிவில் றஊப் ஹக்கீம் இருந்தார். அதனை வெளிப்படையாகவும் தெரிவித்தார். ஆனால், பசீர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்தும் அரசினை திருப்திப்படுத்த ஓடிப்போய் கையொப்பமிட்டார்.

மேலும், திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டே அதற்கு ஆதரவு வழங்குவது எனவும், அவ்வாறு ஆதரவு வழங்கும் போது, கிழக்கு மாகாணசபையில் வழங்கப்பட்ட, அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பஷீர் இவற்றிற்கு மாற்றமான கருத்தில் இருந்ததோடு, எப்பாடுபட்டாவது முஸ்லிம் காங்கிரஸை திவிநெகுமவுக்கு ஆதரவு வழங்க வைக்க வேண்டும் என்று பம்பரமாய் சுழன்றார்.

இவ்வாறான சூழ் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனை மாநாகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றில் தனித்துப் போட்டியிட்டதால், அந்த இரண்டிலும் அரசாங்கம் தோல்வியுற்றமை மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்தல், திவிநெகும சட்டம், பிரதம நீதியரசர் விவகாரம் போன்றவற்றில் இசைந்து போகாமல், கட்சியின் கொள்கைகளை நிபந்தனையாக முன்வைத்து, அரசிற்கு சங்கடம் ஏற்படுத்தியமை என்பன முஸ்லிம் காங்கிரஸ் மீதான அரசின் கோபத்தைக் கிளரிவிட்டன. இவ்வாறான காரணங்களுக்கு மேலதிகமாக, மஹிந்த தலைமையிலான அரசாங்கம் முகம் கொடுத்த எந்தத் தேர்தலிலும், முஸ்லிம் காங்கிரஸ் தங்களின் பங்காளியாக இருக்கவில்லை என்ற மனப்பதிவும் அரசிடம் இருந்தது.

இப்படி ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் பௌத்த கடும் போக்கு வாதிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களில், முஸ்லிம் காங்கிரஸ் மௌனம் காத்தமையை அரசு சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தது. ஏன் எனில், ஓ.ஐ.சி எனப்படும் 57 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான நிறுவனம், எழுத்து மூலமாக இலங்கை அதிபருக்கு அனுப்பிய ஒருவித அழுத்தம் கலந்த கடிதம், தானாக அனுப்பப்படாமல், யாரோ பின்புலத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற பலமான சந்தேகமும், அது முஸ்லிம் காங்கிரஸாகத்தானிருக்கும் என்ற ஊகமும் அரசிடம் இருக்கிறது.

 அதனை உறுதிப்படுத்தும் காரணிகளாக, ஜனாதிபதியை முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் சந்தித்தமை, பெபிலியான தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் அல்ஜெஸீறா மற்றும் பீ.பீ.சி போன்றவற்றில் றஊப் ஹக்கீம் கொடுத்த பேட்டி, பாகிஸ்தான் அமைச்சரோடும் பலஸ்தீன அமைச்சரோடும் றஊப் ஹக்கீம் சந்தித்துப் பேசிய விடயங்கள் அரசாங்கத்திற்கு இச்சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தின.
 
இவ்வாறான நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருப்பது தாம் நினைப்பதை எல்லாம் செய்கின்ற, தமது ஆட்சிக்கு ஆபத்தானது என்பதை சரியாகக் கணிப்பிட்டு, தாம் ஏற்கனவே வலையில் சிக்க வைத்து, தருணம் பார்த்துக் கொண்டிருந்த பஷீரை களமிறக்குவதைத் தவிர வேறுவழியில்லை என்பதை மிகச் சரியாகவே கணித்திருந்தனர். இதற்கு ஏற்றாப் போல் பஷீரும் அவ்வப்போது அரசிடம், நான்தான் முஸ்லிம் காங்கிரஸில் பலமானவன் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் மூளை என்றும் ஒரு விதமான படம் காட்டிக் கொண்டிருந்தார்.

 நிகழ்வுகளும் அவருக்கு சார்பாகவே அமைந்திருந்தன.
உதாரணத்திற்கு, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி எப்போதுமே இந்த அரசாங்கத்தின் போக்கில் அதிருப்தியுற்றவராக, வெளிப்படையாக அரசாங்கத்தை எதிர்க்கும் மனப் போக்கில் இருப்பவர். றஊப் ஹக்கீம் வெளிப்படையாக அரசங்கத்தை எதிர்க்காவிடினும், அரசாங்கம் இழுத்த இழுப்புக்கொல்லாம் இழுபடாமல், தான் ஒரு சிறுபான்மைக் கட்சியின் தலைவன் என்றும, சிறுபான்மையினரை பாதிக்கும் தீர்மானங்களில், தான் தனது சமூகத்தினதும் கட்சியினதும் நிலைப்பாட்டை ஓரளவுக்காவது பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில், றிஷhட், அதாஉல்லா போன்று அரசின் பூரண கட்டுப்பாட்டில் இல்லாதவராக இருப்பவர்.

இதுவே பஷீரின் பலமாகவும் அமைந்துவிட்டது. இவ்வாறு ஹசன் அலி எதிர்ப்பாகவும், றஊப் ஹக்கீம் பூரண கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸை 18வது சரத்திற்கு வாக்களிக்க வைத்தமை - கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சியமைக்க வைத்தமை - திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியமை - பிரதம நீதியரசர் விவகாரத்தில் வாக்களிக்க வைத்தமை என்பவற்றை யார் செய்தார்? எனவும், அது நான் தான் எனவும் பஷீர் அரசுக்கு தெரிவித்தார். எனவே, முஸ்லிம் காங்கிரஸை நினைத்தபடி கொண்டு செல்ல என்னால் முடியும் என அரசை தொடர்ச்சியாக நம்பவைத்துக் கொண்டுவந்தார்.

அரசும் அதனை நம்பியது. அவ்வாறு நம்புவதற்கு மேற்கூறிய நிகழ்வுகள் மாத்திரமன்றி, பஷீரின் அரச சார்பு நிலைப்பாடும் இயங்கு நிலையும் அரசை நம்பவைத்தன. எனவே, முஸ்லிம் காங்கிரஸின் உறுதிப்பாட்டை உடைத்து, தன்னிடம் பணியவைத்து, தான் நினைத்தவற்றிற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக்க, பஷீர் சிறந்த தெரிவுதான் என்பதை அரசு மீள் உறுதிப்படுத்திக் கொண்டது. அவ்வாறு மீள் உறுதிப்படுத்தி கொண்டு, கடந்த கிழக்கு மாகாண சபை நேரத்தில் இராஜினாமாச் செய்ததாகக் கூறிய பிரதி அமைச்சர் பதவிக்கு பதிலாக, பஷீருக்கு ஒரு முழு அமைச்சுப்பதவியை வழங்கும் தனது திட்டத்தை அரங்கேற்றியது. ஆனால், அப்பிரதி அமைச்சர் பதவியைக் கூட இராஜினாமாச் செய்யாமல் வெறும் நாடகம் ஒன்றே அரங்கேறியது. அந்நாடகத்தை மு.கா உயர்பீடக் கூட்டத்தில் பஷீரே தன்னை அறியாமல் ஏற்றுக் கொண்டு, முழு அமைச்சுப் பதவியேற்பு தினத்தில் தான், தனது உண்மையான ராஜினாமா கடிதத்தை தான் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இவ்வாறு பஷீருக்கு முழு அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் போது, றஊப் ஹக்கீம் வெளிநாட்டில் இருந்தார். தலைவருக்கு அறிவிக்கப்படாமல்É தலைவரோடு கலந்தாலோசிக்கப்படாமல்É உயர்பீடம் கூடாமல்É தான் இப்பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதும், இது கட்சியின் விதிகளை மீறுகின்ற விடயம் என்பதும் - முஸ்லிம் காங்கிரஸை சிறுமைப்படுத்தும் விடயம் என்பதும் தெரிந்திருந்ததும் - பஷீர் அமைச்சினைப் பொறுப்பேற்றார். அவ்வாறு பொறுப்பேற்பதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தான் அமைச்சுப் பதவி பெறுவதை அரசாங்கத்தினுள் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்ததனூடாகத் தடுத்ததைப் போன்று, தடுத்துவிடுவார்கள் என்ற அச்சம் பஷீருக்கு இருந்தது. எனவேதான், இரகசியமாய் இதனைக் கச்சிதமாய் முடித்துக் கொண்டார்.

இது தொடர்பில் உயர்பீடக் கூட்டம் அவசரமாகக் கூடிய போது, கிழக்கு மாகாண சபையில் கட்சிக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளில் - கரையோர மாவட்டத்தையோ, மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியான பிரதேச சபையோ, திருகோணமலை மாவட்டத்தில் தனியான பிரதேச செயலகத்தையோ - பிரதேச மட்ட அபிவிருத்திக் குழு தலைமையையோ - மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு  இணைத்தலைமையையோ வழங்கி திருப்திப்படுத்தாத அரசுÉ திவிநெகும சட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டும் நிறைவேற்றாத அரசுÉ அபிவிருத்தியில் முஸ்லிம் காங்கிரஸை பூரணமாக விலக்கி வைத்திருக்கும் இந்த அரசுÉ முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு தெரியப்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும் பஷீருக்கு அமைச்சுப் பதவி வழங்கியது எப்படி? இதன் பின்னணி என்ன? எனக்கேட்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஒருபடி மேலே போய் சுயநிலை விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சுயவிளக்கமளிக்கும் போது, இவ்வமைச்சுப்பதவியை தனக்குத் தரப்போவதாக  இறுதிவரைக்கும் தெரியாது என்றும், ஆனால், தான் ஒரு முழு அமைச்சராக வரவேண்டும் என்பதில் தனக்கு நீண்டகால நாட்டம் இருப்பதாகவும், அது இப்போது இறைவனின் அருளில் கைகூடி விட்டதாகவும் கூறினார். ஆனால் அப்போது அங்கிருந்த எவரும், இவரின் பதிலை, இவர் தனது முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொண்டு இந்த சபையில் பொய் கூறி, இந்த சபையை பிழையாக வழிநடாத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டவில்லை. அவருக்குப் பின்னர் உரையாற்றிய றஊப் ஹக்கீம் தனக்கு எந்தத்தகவலும் இல்லை எனவும், அரசு என்னோடு கலந்தாலோசிக்கவில்லை எனவும் கூறினார்.

 பின்னர,; கண்டிப்புடனான ஆசிர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் கூறினார். அதாவது தனது கட்சியை பலவீனப்படுத்த அரசு பயன்படுத்தப்போகும் ஆயுதம் என்று தெரிந்திருந்தும் ஆசிர்வாதம் வழங்கினார். இதனை, கட்சி தனக்கு அங்கீகாரம் வழங்கிய விடயமாக பஷீர் அரசாங்கத்திடம் காட்டினார். அரசும் அதில் திருப்திப்பட்டுக் கொண்டது.

இவ்வாறு அமைச்சர் பதவி கிடைத்தது முதல் பஷீர், கட்சிக்குள் இருக்கும் சிலரை தனது விசுவாசிகளாக ஆக்கிக் கொண்டு, அந்த ஆதரவு தளத்தில் நின்று, கட்சியை தொடர்ந்தும் தனது கதையை மட்டும் கேட்கும், சுய சிந்தனையற்ற ஜடமாக வைத்துக்கொள்ள முயன்றார். ஆனால், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் பதவி மோகம் கொண்டவர்களும் மட்டும் தான், இந்த வலையில் வீழ்ந்தனர். அதனால் கட்சியின் கருத்தியல் சார்ந்த தீர்மானங்களில், இவர்களுக்கு ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. கட்சி, தான் கூறுவதைக் கேட்;கின்ற நிலையில் இனி இருக்கப் போவதில்லை என்று பஷீர் அறிந்த பின்னர், அரசாங்கத்தை எவ்வழியிலும் திருப்திப்படுத்தவும், முஸ்லிம் காங்கிரஸ் தனது பேச்சைக் கேட்காது விட்டால் அக்கட்சியை உடைக்குமளவு தன்னிடம் பலமிருப்பதாகவும் அரசுக்கு காட்ட சந்தர்ப்பம் பார்த்திருந்தார்.

இப்படி, முஸ்லிம் காங்கிரஸை உடைக்க பஷீரும், அமைச்சுப்பதவிக்கான நன்றிக்கடனை எதிர்பார்த்து அரசும் காத்திருந்த வேளையில்தான், மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பஷீரும் அரசும் தங்கள் திட்டங்களை அரங்கேற்றத் தொடங்கினார்கள். அரசைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸ் மத்திய மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் தனியாகப் போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸ் அங்கு ஜ.தே.க வாக்குகளையே பிரிக்கப் போகிறது. ஆனால், வட மாகாணத்தைப் பொறுத்தவரை அரசாங்கத்தோடு இணைந்தே போட்டியிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. இதற்குக் காரணம், வடக்கில் அரசாங்கம் தோற்பது உறுதியான நிலையில், தோல்வியின் அளவைக் குறைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு அவசியம். அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து பேட்டியிட்டால் வடக்கில் மன்னார் மாவட்டத்தை அரசாங்கம் கைப்பற்றும் சாத்தியமிருக்கிறது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், அவர்களின் எதிர்கால இருப்பு, அரசின் பௌத்த கடும் போக்குவாதிகள் மீதான மெத்தனப் போக்கு, மற்றும் முஸ்லிம் கங்கிரஸை கையாளுவதில் கடந்த காலங்களில் அரசு விட்ட தவறு என்பவற்றைக் கருத்திற் கொண்டு, தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இதனை மாற்றிட பஷீரை அரசு களமிறக்கியது. பஷீர் வட மாகாண மு.கா உயர்பீட உறுப்பினர்களில் சிலரை கையில் எடுத்துக் கொண்டார். அரசோடு சேர்ந்துதான் வட மாகாணத்தில் போட்டியிட வேண்டும் என்று, தனது கருத்தை வட மாகாண உறுப்பினர்களுடாக அழுத்திக் கூறினார்.

இந்நிலையில், களநிலவரம் பற்றி ஒரு கருத்துக் கணிப்பு நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல் தவம் வட மாகாணத்திற்கு விரைந்தார். அங்கு கருத்துக் கணிப்பீடு தலைகீழான முடிவுகளை கொடுத்தது. மக்கள் கட்சியை நேசிப்பதாகவும், கட்சியிலுள்ளவர்கள் மக்களிடம் சென்று அவர்களின் குறைநிறைகளில் அக்கறை கொள்ளாதமையே பிரச்சினை எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின. இது, தவத்தினால் உயர்பீடக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவரின் கருத்தோடு ஒத்த கருத்தையே வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் முத்தலிப் கொண்டிருந்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர், பஷீர் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்ற கடந்த கூட்டத் தீர்மானத்தையே மீண்டும் உறுதிசெய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கிடையில் வடமேல் மாகாண சபை தேர்தல் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாக பஷிரையே கட்சி பெயர் குறித்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திய பஷீர், முஸ்லிம் காங்கிரஸின் வடமேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தவரும் இந்தத் தேர்தலில் களமிறக்கப்படலாம் என்று நம்பியவருமான புத்தளம் எஹியாவை அரசாங்கத்தில் தேர்தலில் போட்டியிட சேர்த்துக் கொண்டுபோய் விட்டார்.

பின்னர், வட மாகாணத்தைச் சேர்ந்த சிலரை, தனித்துக் கேட்கும் இறுதிமுடிவு எட்டப்பட்டதன் பின்பு அரசாங்கத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். இப்போது முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் தர்ம சங்கடப்படுத்தும் விடயங்களை பகிரங்கமாகப் பேசி வருகின்றார்.

பலருக்கு இந்த விடயங்கள் ஊடகங்களினூடாக வெளியானதற்குப் பிறகே பஷீர் முரண்பட்டுக் கொண்டு நிற்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், பஷீர் மூன்று வருடங்களுக்கு முன்னர் முரண்பட்டுப் பிரிந்து, சென்று அரசாங்கத்தோடு சேர்ந்து அமைச்சுப் பதவி எடுக்கத் தொடங்கியதற்கு முன்னரே, முரண்பாட்டுக்குரிய கரு விழுந்து விட்டதை அவதானிக்கக் கூடியதாகவே இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தினுள் அன்று போனதும் பஷீராலேயே, இன்று வெளியிறங்காமல் இருப்பதும் பஷீராலேயே என்பதை சரியாக கணக்குப் போட்டுப் பார்த்தால் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

 ஆகவே, முஸ்லிம் காங்கிரஸை உடைக்க பஷீரைப் பயன்படுத்தும் திட்டம் இன்று நேற்றுத் தொடங்கியதல்ல என்பதை தொடர்ச்சியான இச்சம்பவங்களினூடாக நாம் புரிந்து கொள்ளலாம்.

Share this article :

Post a Comment

Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by