
தற்காலிக பள்ளிவாசல் என்று பேசப்படுவது
மிகச்சிறிய இடம், இந்த இடத்தை அகற்ற வேண்டும் என இனவாதிகள் கோரியதெல்லாம்
போக இன்றும் நேற்றும் ஏற்பட்ட சொத்து சேதங்கள் மற்றும் மக்கள் உணர்வுகள்
இறுதியில் ஒன்றுக்கும் இல்லாமல் போய்விடுமா எனும் அச்சம் பிரதேச வாசிகளிடம்
நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தை நாடியபோது, சட்டத்தினால்
வழங்கப்பட்டிருந்த அனுமதியை காடையர்கள் இரும்பாலும், தடியாலும்,
இனவாதத்தாலும் நீக்க முடியுமாக இருந்தால் ஏற்கனவே பெருந்தெருக்கள்
அபிவிருத்தி செயலகம் கைப்பற்றியிருக்கும் பழைய பள்ளிவாசல் எவ்வாறு
பாதுகாக்கப்படும் எனும் சந்தேகமே பெரும்பாலான மக்களிடம் நிலவுவதாக
அறியமுடிகிறது.
எனினும், “பெரியவர்கள்” இப்போது
தலையிட்டிருப்பதனால் நாளைய ஊரடங்கு நிறைவானதன் பின்னர் என்ன நடைபெற
போகின்றது என்பதை ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்திருப்பதாக அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
Post a Comment