வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும்
செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல்
அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன்
நிறைவடைந்துள்ளது. இதனையடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment