கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பிரதேசத்தில் தற்போது அமைதி நிலை காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு - கிராண்ட்பாஸ் - பலாமரச் சந்தியிலுள்ள சுவர்ண சைத்திய வீதி
பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வருவதற்காக பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த அமைதியின்மையில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில்
தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையினால் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள பல கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்
படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்
அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment