சுபைரின் பேஸ்புக் நிலைமொழியால் எழுந்துள்ள சந்தேகம்
முன்னாள் அமைச்சரும் கிழக்கும் மாகாண உறுப்பினருமான அமீர் அலி அவர்களுக்கும் தனக்கும் கருத்து முரண்பாடு தோன்றியுள்ளதாக குறிப்பிடும் பேஸ்புக் நிலைமொழி (Status) ஒன்று மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

சுபைர் அமீர் அலியுடன் எப்போதும்
நெருக்கமான உறவைப் பேணி வந்தவர் என்பதுடன் தனது சொந்த ஊரிலும் பார்க்க
ஓட்டமாவடியிலும் காத்தன்குடியிலும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்குக்
கேட்கும் முறையின் காரணமாகவே இவர் மாகாண சபைக்கு தேர்வாக முடிந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

அமீர் அலியின் ஆலோசனையிலும் அரவணைப்பிலுமே இவர் அரசியல் செய்துவந்ததை எப்போதும் அவதானிக்க முடிந்தது.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாண ஆளுந்தரப்பில்
பல்வேறு முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த பேஸ்புக்
நிலைமொழி வெளியிடப்பட்டுள்ளது இவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள்
வலுப்பெற்றுள்ளனவா என்ற சந்தேகங்களை தூண்டிவிட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் பக்கம் சுபைர்
அவர்களாலேயே முகாமைசெய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனினும்
குறித்த நிலைமொழி தொடர்பில் அவரிடம் உறுதிப்படுத்த முடியவில்லை.
எவ்வாறெனினும் செய்தி பதிவேற்றப்படும் வரை குறித்த நிலைமொழி அவரது
பக்கத்தில் காணப்படுவதுடன் அதற்கு அவரது நண்பர்கள் Like மற்றும் கருத்துகளை
இடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலைமொழியின் மேலும் சில படங்கள் வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றன:
.
Post a Comment