தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கல்முனை இஸ்லாமாபாத்தில்
'திரிதரு பியச' சிறுவர் வள நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (04)
நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு இவ்வள நிலையத்தை திறந்துவைத்தார்.
இவ்வள நிலையத்தில் ஆங்கிலம், கனணி போன்ற பயிற்சி நெறிகளும் பொழுது போக்கு,
உடற்பயிற்சி சாதனங்களும் காணப்படுகின்றன. இவ்வள நிலையத்தினை பாடசாலை கல்வி
நேரம் தவிர்ந்த மாலை வேளைகளிலும் பயன்படுத்தி பயன் பெறமுடியும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் திருமதி அனோமா
திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர்
ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் அலாவூடீன், கல்முனை பிரதேச செயலக
நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அபுல்ஹசன், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர்
யூ.எல்.எம்.ஹாசீம், மாவட்ட சமூக உள நல உத்தியோகத்தர் யு.எல்.அசாறுடீன்
மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment