
நேற்று சம்மாந்துறையில் வறிய குடும்பங்களுக்கு இலவச நீர்விநியோகத்திற்கான நிதியினை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மெளலவி கே.எம். ஆதம்பாவா மதனி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டிலிருந்து முஸ்லிம்களை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குழுவினர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு நான் மற்றும் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட எமது அமைச்சுப் பதவிகளை துறந்தாவது போராடுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றோம்.
இன்று தேசிய நீர்வழங்கல் சபையினுடாக உங்களுக்கு வழங்கப்படுகின்ற நீர் விநியோகத்திற்கான நிதியினை சவூதி அரேபியாவிலுள்ள தனவந்தர்கள் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்காக நீங்கள் இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும். இன்று 32 குடும்பங்களுக்கு இந்த இலவச நீர் விநியோகம் வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் இது இன்னமும் விஸ்தரிக்கப்பட இருக்கின்றது.
அரசாங்கத்தின் மூலமாக நிதியினை பெற்று உங்களுக்கான அபிவிருத்தியினை செய்ய முயற்சி செய்கின்ற அதேவேளை தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் உங்களுக்கான சேவைகளைச் செய்வதற்கு நாம் முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றோம் என்றார்.
இவ்வைபவத்தில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Post a Comment