வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ள
முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் புதன்கிழமை வேட்மனுக்களை தாக்க
செய்யவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான
ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேட்பாளர் மனு
பூர்த்தி செய்யும் நிகழ்வுகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக கூறிய ஹசன்
அலி, எதிர்வரும் புதன்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யக் கூடியதாக
இருக்குமென நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் மண்வெட்டி சின்னத்தில் மலையக கட்சிகளுடன்
இணைந்து போட்டியிடவும் தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும்
கூறினார்.

Post a Comment