கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களுக்குரிய
அதிகரங்கள் அந்தந்த அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை
பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கண்டி ஜனாதிபதி அலுவலகத்தில் கிழக்கு மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்
அமைச்சுப்பொறுப்புக்களை சரிவர செய்யவேண்டும். அவர்களின் அமைச்சுக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியது அவர்களுக்குரிய
அதிகாரமாகும்.
மாதாந்தம் அமைச்சின் திணைக்கள அலுவலர்களுக்கான கூட்டங்களை இதுவரை ஆளுநர்
நடத்தி வந்த நிலையில் இதன்பின்னர் அமைச்சர்களே அதனை நடத்த வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களின் அதிகாரத்தில் மாகாண ஆளுநர் தலையிடுவதாக
குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அண்மைக்காலமாக மாகாண சபை சரியாக
இயங்கவில்லை. இந்த நிலையிலேயே ஜனாதிபதியினால் இக்கூட்டம் நடத்தப்பட்டமை
சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment