நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபை முறை ரத்துச்
செய்யப்படாவிட்டால் பௌத்த பிக்குமார்கள் தீக்குளிக்கவும் தயங்கமாட்டார்கள்
என்று பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மாகாண சபை முறையை ரத்துச்
செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று மகரகமையில்
பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுபலசேனா அமைப்பின்
தலைவர் கிரம விமலஜோதி தேரர், மாகாண சபை முறைக்கு ஆதரவான அமைச்சர்களை
கடுமையாக திட்டித் தீர்த்தார்.
மாகாண சபை முறைக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் உடனடியாக தங்கள் கருத்தை
மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர்கள்
அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும்
அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபை முறை நீக்கப்பட்டால் தனது
அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சவால்
விட்டுள்ளார்.
ஆனால் மாகாண சபை முறை நீக்கப்படாவிட்டால், அதனை மேற்கொள்ளுமாறு
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பௌத்த பிக்குமார்கள்
தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment