மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒன்றியம் முயற்சித்து வருகின்ற போதிலும் அது
இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் புதன்கிழமை கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை உடனடியாக சந்திக்க தீர்மானித்திருந்தனர்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஒன்றியத்தின் தலைவரான அமைச்சர் பௌஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர் இதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியை கேட்டுள்ள போதிலும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் முக்கிய விவகாரம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க முடியாமல் இருப்பதும், மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதும் மிகப்பெரும் கவலைக்குரிய விடயம் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment