அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்
குழுவின் இரண்டாம் கட்ட அமர்வு திட்டமிட்டபடி இன்று கூடுமென தெரிய வருகிறது.
எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள் எவரும் இன்றிய நிலையில் அரசாங்க தரப்பைச் சேர்ந்த 19 உறுப்பினர்களுடன் தெரிவுக் குழுவின் இரண்டாவது அமர்வு நடைபெறும்.
தெரிவுக் குழுவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கியிருந்த போதிலும் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள் இதுவரையில் தெரிவுக் குழு தொடர்பில் அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கன்னிக் கூட்டமும் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளின்றியே நடத்தப்பட்டது.
ஜுலை 09 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய முதலாவது அமர்வின்போது இரண்டாவது அமர்வு ஜுலை 26 ல் நடத்தப்படுமென குழுத் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமனம் மற்றும் அதன் செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. ஆகியன தொடர்ந்தும் பகிஷ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment