கல்முனைத்தொகுதியின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னெடுத்துச்
செல்லும் ” ஒளிரும் கல்முனை ” வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான
நிகழ்வொன்று இன்று காலை கல்முனை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேசத்தைச் சேரந்த கல்முனை , சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை
மற்றும் மருதமுனை பிரதேச முஸ்லிம் மக்களின் நீண்டநாள் தேவைகளுள்
ஒன்றாகவிருந்த குவாசி நீதிமன்றம் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம்,
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் , கல்முனை பிரதேச செயலாளர்
எம்.எம்.நௌபல் , சட்டத்தரணிகளான ஏ.எம்.றகீப் , எம்.எம்.முஸ்தபா , குவாசி
நீதவான் அல்ஹாஜ் என்.எம்.இஸ்மாயில் உ்ட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment