
வடக்கின் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார்.
புனரமைக்கப்பட்டுள்ள ‘ஏ 9’ பாதையைத் திறந்துவைக்கும் ஜனாதிபதி இன்று பிற்பகல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரணைமடு விமான ஓடுதளத்தையும், கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் வங்கிக் கிளைகளையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு விமான ஓடுதளம் முற்றுமுழுதாக விமானப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. விமானப்படையினரின் பொறியியல் நிர்மாண, உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே இரணைமடு விமான ஓடுதளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் இந்த விமான ஓடுதளம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விமானப் படையிடம் இருக்கும் மிகப் பெரிய விமானமான சீ-130 விமானத்தை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் குறித்த விமான ஓடுதளம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம், அம்பகாமம் ஓலுமட ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் சென்று விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இரணைமடு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் இரணைமடு விமான ஓடுதளத்தைப் புனர்நிர்மாணிக்கும் பணிகள் விமானப் படையினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
Post a Comment