Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

முஸ்லிம் வீட்டில் அத்து மீறிய பொது பல சேனா அலுவலகம் ?

Wednesday, June 190 comments

wm75.jpg
குருநாகல் நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி பிஸ்கால் மூலமாக சட்ட நடடிவடிக்கை மேற்கொள்ளயிருந்த வேளையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் பொது பல சேனா அமைப்பினர் அத்துமீறிப் புகுந்து குருநாகலுக்கான பொது பல சேனா அலுவலகம் கிளை ஒன்றைத் திறந்துள்ளனர்.

இந்தச் சம்வம் நேற்று 18-06-2013 மாலை குருநாகல் கண்டி பிரதான வீதியில் வில்கொட என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிஸ்காலுடன் அவ்வீட்டுக்குச் செல்லும் வேளையில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராக இருந்துள்ளனர்.இது தொடர்பாக குருநாகல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையிட்டு பொலிஸார் குருநாகல் நீதி மன்றத்தின் பதிவாளருடன் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். அதன் பின் நேற்று பிஸ்கால் மூலம் எடுக்கப்படவிருந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
h2mm.jpg
இந்தச் சம்வபம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் விசாரணை மேற் கொண்டபோது முஸ்லிம் ஒருவர் மோசடி ரீதியாக இந்த வீட்டை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் கோரி இந்த இடத்தில் குருநாகல் பொது பல சேனா அலுலமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
 
இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வீடு தொடர்பாக 26 வருடங்கள் வழக்குப் பேசி கடந்த 2004 ஆம் ஆண்டு பிஸ்கால் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டடு வீடு தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின் 2010 ஆம் ஆண்டு வரை மீண்டும் நாங்கள் எந்தவிதமான பிரச்சினையுமின்றி வீட்டை வாடகைக்கு விட்டு வந்தோம். 2010 ஆம் ஆண்டும் தங்களுடைய எதிராளி எங்கள் வீட்டில் இருந்தவர்களை பலவந்தமாக வெளியேற்றி சட்ட விரோதமான முறையில் வீட்டில் புகுந்து கொண்டார். அதன் பின் சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்டதன் பிரகாரம் எதிராளி குற்றவாளியாகச் சிறைச்சாலை சென்று விடுதலை செய்யப்பட்டார். 
 
 
அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பொலிஸில் கையொப்பமிடும் ஒருவர். இந்த வீடு தொடர்பாக உயர் நீதி மன்றம், மாவட்ட நீதி மன்றம் என தீர்ப்புக்கள் தங்களுக்கு சாதமாக உள்ளன. பொலிஸாரும் நீதி மன்றமும் இணைந்து நீதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by