திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்
குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால்
கல்முனையில் திதுலன ஒளிரும் கல்முனை என்ற வேலைத்திட்டத்தினைக் கொண்டுவந்து
51 வேலைத்திட்டங்கள் நேற்றும்இ, இன்றும் (வியாழன் வெள்ளி) பாரிய
அபிவிருத்தியின் ஆரம்ப நிகழ்வுகளால் களைகட்டியது கல்முனை மாநகர பிரதேசம்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்ற வேலைத்திட்டத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்
நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் பங்குபற்றுதலுடன் கல்முனை,
கல்முனைக்குடி, நட்பிட்டிமுனை, சாய்ந்தமருது கல்முனை தமிழ் பிரிவு போன்ற
இடங்களில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் மிக முக்கியமான விடயம் அரசியல் ரீதியில் ஒவ்வொரு அரசியல்வாதியும்
தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கழைந்து ஒற்றுமையாக பாராளுமன்ற உறுப்பினரோடு
கைகோர்த்து நின்று இன்று மக்களுக்காக களமிறங்கியுள்ளமையை பார்க்கின்றபோது,
மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.
அஷ்ரபின் கல்முனை அபிவிருத்தி கனவு நனவாகும் காலம் கனிந்து விட்டதாக மக்கள்
பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. அதுபோன்று எதிர்காலத்திலும் இந்நாட்டு
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் அபிவிருத்தி விடயத்தில் ஒன்றுபட வேண்டும்
என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருப்பதை உணர முடிகிறது.
மிக நீண்டகால கல்முனை அபிவிருத்தி பின்னடைவை தீர்த்து பல்வேறு துறைகளிலும்
பாரிய அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு
கல்முனைப்பிரதேச மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Post a Comment