தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ” ஒளிரும் கல்முனை ”
அபிவிருத்தி பெரு விழாவின் கல்முனைகுடி பிரதேசத்திற்கான அபிவிருத்தி பணிகளை
ஆரம்பித்து வைக்கும் பெருவிழா இன்று மாலை கல்முனை ஜும் ஆப் பள்ளிவாசல்
முன்றலில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத்“ தொகுதி அபிவிருத்தி
குழுத்தலைவருமான சட்டத்தரண எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி
நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான
றவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான
ஏ.எம்.ஜெமீல் , ஏ.எல்.தவம் , கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ்
மீராசாஹிப் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பொருளாளர்
ஏ.ஸி.யஹயாகான் , கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் ,
ஏ.ஏ.பஸீர் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் உட்பட பலரும்
இந்நிகழ்வில் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திலுள்ள ஆரம்ப பாடசாலையான றோயல்
வித்தியாயலத்திற்கான நிதந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடுதல் , பொழுது
பொக்கு புங்கா திறந்து வைத்தல் , வீதியோர அலங்கார மின் விளக்குகளை ஒளிரச்
செய்தல் , இரும்பு பாலம் தற்ந்து வைத்தல் , கடைத்தொகுதிக்கான அடிக்கல்
நடும் வைபவம் என்பவற்றை தொடர்ந்து பொபதுக்கூட்டமும் இடம்பெற்றது.



Post a Comment