Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

சிறுபான்மையினருக்கு எதிரானவற்றை அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'

Saturday, June 290 comments



இன்று 13வது அரசியல் யாப்பு பற்றி பேசப்படுகின்றது ஆனால அதனை நாங்கள் கேட்கவில்லை. இந்தியாவின் அனுசரணையுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட இந்த 13வது அரசியல் யாப்பு மக்களுக்கு முழுமையாக கொடுக்கப்படாதிருந்த நிலையில் பின்னர் வந்த மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு தீர்வாக 13+ ஐ தருவதாக கூறினார். இந்த கருத்தை இந்திய அரசுக்கு மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையிலும் கூறினார். பின்னர் ஐ.நா வின் தருஸ்மான் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அதற்கு பதிலாக LLRC என்ற தீர்வை கொண்டுவந்து அதனைத்தருவதாக ஜனாதிபதி கூறினார் பின்னர் அந்த LLRC அறிக்கையைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி சாய்ந்தமருது ‘சி பிரீஸ்’ கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆஸாத் சாலி,

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட LLRC அறிக்கையில் 13 வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அரசு நடைமுறைப்படுத்த பின் நிட்பதாகவும் இதற்குப்பதிலாக விமல் வீரவம்ச,சம்மிக்க ரணவக்க, உதய கம்மன்வில பொதுபலசேன என போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டிக்கொண்டு முஸ்லீம்களின் கடைகளை உடைப்பது இறைச்சிக்கடைகளுக்கு தீ வைப்பது போன்ற தீவிரவாத வேலைகளைச்செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஜனாதிபதியின் ஊரான தங்கல்லயில் இறைச்சிக்கடையை தீவைக்கும் போது போலீஸ் காரர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர். அனுராதபுரத்தில் பள்ளிவாசலை உடைக்கும்போதும்  DIG உட்பட எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இவைகளைத்தான் தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியதாகவும் இப்படியான சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை எங்களது அரசியல் வாதிகள் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் இவர்களை இறைவன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் மறுமையில் கேள்வி கணக்கின் போது உனக்கு தந்த தலைமைத்துவம் என்ற அமானிதத்தை பாதுகாத்தாயா என இறைவன் கேட்பான் என்றும் இதற்க்கு மகிந்ததான் செய்தார் என இறைவனிடம் கூற முடியாது என்றும் கூறினார்.

கடந்த வாரம் கல்முனைக்கு பொதுபலசேன வரவுள்ளதாக கேள்விப்பட்டு தான் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதனை நிறுத்தியதாகவும் இந்த விடையத்தை இப்பிரதேச அரசியல்வாதி தலையிட்டு நிறுத்தியதாக செய்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

13 வது திருத்தச்சட்டம் சம்மந்தமாக தான் விரும்பியதை தான் செய்வேன் விருபியவர்கள் இருக்கலாம் விரும்பாதோர் விலகிச்செல்லலாம் என்று ஜனாதிபதி கூறுவதாகவும் இத்தனையும் கேட்டுக்கொண்டு 17 வெட்கம் கேட்ட நம்மவர்கள் அரசுடன் ஓட்டிக்கொண்டிருப்பதாகவும்  கடந்த மாகாணசபை தேர்தலின் போது தான் தேர்தல் கேட்க வரவில்லை என்றும் முஸ்லீம்களை ஒற்றுமைப்படுத்தவே வந்ததாகவும் அது மட்டுமல்லாது முஸ்லீம் தமிழ் உறவை வளர்க்க வந்ததாகவும் பின்னர் முஸ்லீம் காங்கிரசில் தேர்தலில் நின்றதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீம் ஜனாதிபதியை காண்டாமிருகம் என வர்ணித்ததாகவும் பின்னர் அங்கு சென்று ஒட்டிக்கொண்டதாகவும் தான் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நிட்க வேண்டும் என மக்கள் விரும்பிய போதும் திருகோணமலை மலையில் கேட்கலாம் என்றபோதும் ஹக்கீம் என்னை காத்தான்குடியில் நரியுடைய பிரதேசத்தில் கேட்குமாறு பணித்தார் என்று கூறிய ஆஸாத் சாலி மட்டக்களப்பில் அஸ்ரபுடைய பணத்தை வைத்துக்கொண்டு தேர்தல் செய்பவருடன் இணைந்து தேர்தல் செய்யுமாறு ஹக்கீம் தெரிவித்ததாகவும் கூறினார் இருந்தும் மட்டக்களப்பு மக்கள் 7000 வாக்குகளை தனக்கு வழங்கி தன்னை இரண்ட்டாவது இடத்துக்கு வரவைத்த இப்பகுதி மக்களை தான் நன்றியுடன் பார்ப்பதாகவும் கூறினார்.

அரசாங்கத்தை விட்டு விலகி வந்து தேர்தலில் குதித்த ஹக்கீம் பின்னர் அரசுடன் இணைந்து ஆட்சியை அமைத்ததும் அவசர அவசரமாக புதிய சபையில் தீவி நெகும சட்டத்தை சபைக்கு கொண்டுவந்ததாகவும் பின்னர் பாராளுமன்றத்தில் அதனையும் நிறைவேற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையினல்  தீவி நெகும சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை கிழக்கு மாகாண சபை முஸ்லீம் காங்கிரஸ் குழுத்தலைவர் எல்லோரையும் வாக்களிக்க  வைத்ததை எல்லோராலும் மறக்க முடியாது என்றும் கூறினார். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் மர்ஹும் அஸ்ரப் கண்ட கனவின் வடிவங்களில் ஒன்றான தேசிய ஐக்கிய முனணியை தான் முன்னெடுத்துச் செல்வதாகவும் அது இந்த நாட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்துச்செல்லும் என்றும் தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் ,நவ சமாஜ கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா ,எக்சத் லங்கா ஜனதா கட்சி தலைவர் சரத் மாமேன்மட மற்றும் சோமசிறி அப்புஆராய்ச்சி போன்றோரும் கலந்து கொண்டனர்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by