Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

முஸ்லிம்கள் யோசிக்க வேண்டிய தருணமிது: தவம்

Saturday, June 290 comments

தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை காட்ட முனைகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

கல்முனை அபிவிருத்தி பெருவிழா கடந்த சனிக்கழமை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற போது அவ் அபிவிருத்தி பெருவிழாவில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் அக்கரைப்பற்றில் இடம்பெறும் அபிவிருத்திகள் போன்று கல்முனையிலும் நடைபெறவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அக்கரைப்பற்றில் அபிவிருத்திகள் நடைபெற வேண்டும் என்று அழுதிருக்கிறோம். ஏனென்றால், அபிவிருத்தியைத் தவிர மற்றைய எல்லாவற்றிலும் உடுத்திருந்த ஆடைகளை நொய்ய விட்டுவிட்டு அங்கு இருக்கின்ற அரசியல்வாதி இன்னும் சொல்லப் போனால் ஒரு விபசாரத்தைவிட மோசமான வேலைதான் அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம்மவர்கள் சொல்வார்கள் உம்மாவுடன் போகப் போகிறாயா? ஓம் ஓம் வாப்பாவுடன் போகப்போகிறாயா? ஓம் ஓம் இப்படி அபிவிருத்திக்காக இந்த சமூகத்தை துண்டு துண்டாக வெட்டியளித்துத்தான் அல்லது முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டாலும் முஸ்லிம்களுடைய பள்ளி உடைக்கபட்டாலும் அவர்களுயை மதச் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு எடுக்கின்ற அரசியல் அபிவிருத்தித்தான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கின்ற அபிவிருத்தி. இது தேவையில்லை.

அப்படி அக்கரைப்பற்றிலே நடக்கின்ற அபிவிருத்தி கல்முனை மண்ணுக்கும் வேண்டும் என்று தயவு செய்து நமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யாரும் நினைத்துவிடாதீர்கள். இன்றிருக்கின்ற அரசியல் சூழ்நிலை என்பது வேறு, அக்கரைப்பற்றில் இருக்கின்ற அரசியல் தலைமகனுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பாக திவிநெகும, பிரதம நீதியரசர் விடயம், பொது பலசேனா பிரச்சினை என்று பல வந்தபோதும் ஆதரித்தார்.

இப்போது 13 ஆவது திருத்தம் வந்தபோதும் ஆதரித்தார்.இந்த முஸ்லிம்களுக்கு விரோதமாக போகின்ற போக்கு இந்த அரசியல் ஊடாக தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் போராட்டத்தினுடைய வழி முறைகள் நோக்கங்களை இலட்சியங்களை மாற்றும்.

அக்கரைப்பற்றில் உள்ள அரசியல்வாதிக்கு இதைப்பற்றி பிரச்சினை இல்லை. இலங்கைக்கு உள்ளே நடக்கின்ற அரசியல் பற்றியும் பொதுபலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள்? இராவணா பலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள். இதனுடைய பின்னணி என்ன? இதனுடைய நோக்கம் என்ன என்பது பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை.

இலங்கையை சுற்றி நடக்கின்ற புவியியல்சார் அரசியலில் இந்தியா என்ன காய் நகர்த்துகிறது. சீனா என்ன காய் நகர்த்துகிறது. இதனை மேலாட அமெரிக்கா என்ன யோசனை செய்கிறது என்பது பற்றியும் அரசாங்கத்திற்குள்ளே உள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. - See more at: http://kalam1st.com/644#sthash.C6yZsBeK.dpuf
தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பெளத்த தேசியவாதம் அதனுடைய கொடும் பிடியை, அதன் கோரப்பல்லை காட்ட முனைகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

கல்முனை அபிவிருத்தி பெருவிழா கடந்த சனிக்கழமை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற போது அவ் அபிவிருத்தி பெருவிழாவில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் அக்கரைப்பற்றில் இடம்பெறும் அபிவிருத்திகள் போன்று கல்முனையிலும் நடைபெறவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அக்கரைப்பற்றில் அபிவிருத்திகள் நடைபெற வேண்டும் என்று அழுதிருக்கிறோம். ஏனென்றால், அபிவிருத்தியைத் தவிர மற்றைய எல்லாவற்றிலும் உடுத்திருந்த ஆடைகளை நொய்ய விட்டுவிட்டு அங்கு இருக்கின்ற அரசியல்வாதி இன்னும் சொல்லப் போனால் ஒரு விபசாரத்தைவிட மோசமான வேலைதான் அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம்மவர்கள் சொல்வார்கள் உம்மாவுடன் போகப் போகிறாயா? ஓம் ஓம் வாப்பாவுடன் போகப்போகிறாயா? ஓம் ஓம் இப்படி அபிவிருத்திக்காக இந்த சமூகத்தை துண்டு துண்டாக வெட்டியளித்துத்தான் அல்லது முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டாலும் முஸ்லிம்களுடைய பள்ளி உடைக்கபட்டாலும் அவர்களுயை மதச் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு எடுக்கின்ற அரசியல் அபிவிருத்தித்தான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கின்ற அபிவிருத்தி. இது தேவையில்லை.

அப்படி அக்கரைப்பற்றிலே நடக்கின்ற அபிவிருத்தி கல்முனை மண்ணுக்கும் வேண்டும் என்று தயவு செய்து நமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யாரும் நினைத்துவிடாதீர்கள். இன்றிருக்கின்ற அரசியல் சூழ்நிலை என்பது வேறு, அக்கரைப்பற்றில் இருக்கின்ற அரசியல் தலைமகனுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பாக திவிநெகும, பிரதம நீதியரசர் விடயம், பொது பலசேனா பிரச்சினை என்று பல வந்தபோதும் ஆதரித்தார்.

இப்போது 13 ஆவது திருத்தம் வந்தபோதும் ஆதரித்தார்.இந்த முஸ்லிம்களுக்கு விரோதமாக போகின்ற போக்கு இந்த அரசியல் ஊடாக தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் போராட்டத்தினுடைய வழி முறைகள் நோக்கங்களை இலட்சியங்களை மாற்றும்.

அக்கரைப்பற்றில் உள்ள அரசியல்வாதிக்கு இதைப்பற்றி பிரச்சினை இல்லை. இலங்கைக்கு உள்ளே நடக்கின்ற அரசியல் பற்றியும் பொதுபலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள்? இராவணா பலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள். இதனுடைய பின்னணி என்ன? இதனுடைய நோக்கம் என்ன என்பது பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை.

இலங்கையை சுற்றி நடக்கின்ற புவியியல்சார் அரசியலில் இந்தியா என்ன காய் நகர்த்துகிறது. சீனா என்ன காய் நகர்த்துகிறது. இதனை மேலாட அமெரிக்கா என்ன யோசனை செய்கிறது என்பது பற்றியும் அரசாங்கத்திற்குள்ளே உள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை
Share this article :

Post a Comment

Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by