
பம்பலப்பிட்டி முஸ்லிம் வர்த்தகர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள
பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தமிழ் வர்த்தகர்கள் அடங்கலாக பலரை
அச்சுறுத்தி இலட்சக்கணக்கில் கப்பம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாகவும்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வினர் தெரிவிக்கின்றனர்.
பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலி சந்தேக நபர்களை பிரதி
பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன விசாரணைக்குட்படுத்தியபோது
அவர்களிடமிருந்து பல தமிழ் வர்த்தகர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்
கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப்
பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதாவது, குறித்த வர்த்தகர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் புலிகள்
இயக்கத்துடன் உங்களுக்கு தொடர்பு இருக்கின்றமை எமக்கு தெரியும். அதுபற்றிய
தகவல்கள் எங்களிடம் இருக்கின்றன எனவே நீங்கள் கைதாகாமலிருக்க
வேண்டுமென்றால் கப்பம் வழங்க வேண்டுமென்று அச்சுறுத்தியதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அரசியல்வாதியொருவருடைய செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தி 72
மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றமை தொடர்பாகவும்
தகவல்கள் கிடைத்துள்ளதுடன, குறித்த தொலைபேசி அழைப்பை இச் சம்பவம் தொடர்பில்
கைதான பொலிஸாரில் ஒருவரே மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்படப்படுகிறது.
இவ்வாறு பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன பற்றிய பல்வேறு தகவல்கள்
கசியத் தொடங்கியுள்ளதுடன் குற்றப்புலனாய்வினர் விசாரணைகளை
தீவிரப்படுத்தியுள்ளனர்.
Post a Comment