(Tm) காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி
நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு
காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமானதென
கூறப்படும் மையவாடி காணியில் காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்று
அமைப்பதற்காக கடந்த 11.5.2013 அன்று வேலியிட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு
விசாரணை இன்று மட்டக்கள்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துகொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் இன்று ஆஜராகும்படி காத்தான்குடி நகரசபை
தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
விடுத்திருந்தது.
இவ் அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியக் காரணத்தினால்
மேற்படி காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரையும்,
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சியாத்தை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு
நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இவ்வழக்கை எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைததுள்ளார்.
கடந்த மே மாதம் 11ஆம் திகதி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ
பள்ளிவாயலுக்கு சொந்தமானதென கூறப்படும் மையவாடிக் காணிக்குள் கட்டிடம்
கட்டுவதற்காக காத்தான்குடி நகரசபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்துக்
கொண்டிருந்தபோது அவ்விடத்தில் பொதுமக்கள் திரண்டு வேலி இடுவதை தடுக்க
முற்பட்டனர்.
இதன்போது அங்கு ஏற்பட்ட கலவரத்தில் மூன்றுபேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment