இன்று நாட்டில் ஆளுந்தரப்பில் உள்ளவர்களுக்கு ஆஸாத் சாலி என்ற பெயரைக்
கேட்டாலே போதும் பயப்படுகின்றார்கள் எனது பெயருக்கு ஏன் ஏன் இவ்வாறு
பயப்படுகின்றார்கள் என்று எனக்குத் தெரியாது என்று தேசிய ஐக்கிய
முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமாகிய
ஆஸாத் சாலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் நேற்று (29.06.2013) நடைபெற்ற கூட்டத்தில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.அங்கு
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் கூட்டம் நடத்தப் போகிறேன் என்றால் அக் கூட்டத்திற்கு அனுமதி
வழங்கப்பட்டு பின்னர் ரத்துச் செய்யப்படுகின்றது கூட்டம் நடக்கும் என்று
சொல்லப்படுகின்ற இடத்திற்கு ஓயில் தார் போன்றவற்ரைத் தெளிக்கின்றனர்
இவ்வாறு எனது பெயருக்கு ஏன் பயப்படுகின்றார்கள் நான் மந்திரியோ அல்லது
மாகாண சபை உறுப்பினரோ இல்லை என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆஸாத் சாலிக்கு முஸ்லீம்கள் மத்தியில் ஏன் முஸ்லீம் சகோததர்களிடம் வந்து
கருத்துக்களைச் சொல்ல முடியாது நான் இன்று வந்தது பாதுகாப்புத் தரப்பினரால்
கைது செய்யப்பட்டிருந்த வேளை எனக்காக தொழுது துஆச் செய்து நோன்பு நோற்ற
மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கவே வந்தேன் இந்த நாட்டில் நன்றி
தெரிவிப்பதற்குக் கூட சந்தர்ப்பம் இல்லை.
இன்று நாட்டில் முஸ்லீம்களுக்குத்தான் பிரச்சினை தலைதூக்கியுள்ளது தமிழ்
மக்களுக்கு இருந்த பிரச்சினை முடிவடைந்து வரும் சந்தர்ப்பத்தில்
முஸ்லீம்களுக்கான பிரச்சினை எழுந்துள்ளது பள்ளி வாயல்களை உடைப்பது, பர்தாவை
கழட்டுவது, இறைச்சிக் கடைகளை மூட வைப்பது, மாடு அறுக்கக் கூடாது என்று
சொல்வது என்று பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே போகின்றது. இப்
பிரச்சினைகளுக்கெலல்லாம் தீர்வு மிக விரைவில் வரும்.
முஸ்லீம் சமுகத்திற்காக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராகத்தான் இருக்கிறேன்
சமுகத்திற்காக எனது உயிர் பரிக்கப்படுமாக இருந்தால் அதைவிடப் பெருமை
எனக்கு வேறு எதுவும் கிடையாது. அரசாங்கத்தில் இருந்து சமுகத்திற்காக பதவி
பட்டங்களை தூக்கி எரிந்து விட்டே வந்துள்ளேன் இன்று அரசாங்கத்தோடு
இருக்கும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் சமுகத்திற்காக துணிந்து
கதைக்கின்றார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
முஸ்லீம் வங்கியில் முஸ்லீம்கள் போட்ட பணத்தையே மோசடி செய்தவர்களும் மறைந்த
தலைவரின் பணத்தை நம்பிக்கைக்கு துரோகம் செய்த கொள்ளையிட்டவர்களும்
சமுகத்தைப் பற்றி நியாயம் கற்பிக்க முயற்சிக்கின்றமை கவலையாகவுள்ளது.
முஸ்லீம்களுக்கு எங்கு பிரச்சினை நடந்தாலும் அப் பிரச்சினையை தட்டிக்
கேட்கும் முதலாவது நபராக நான் நிற்பேன் அவ்வாறு நிற்பதால்தான் மக்கள்
சந்திப்புக்கள் இடம் பெறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.
நாங்கள் முஸ்லீம்களாக இருக்கின்றோம் சிலர் பொது பலசேனாவாக இருக்கின்றார்கள்
அவ்வாரானவர்கள் வருகைக்கு எதிப்புத் தெரிவிக்கின்றனர் இவ்வாறு சமுகத்தைக்
காட்டிக் கொடுக்ககும் அநேகம் பேர் நம் சமுகத்தில் இருக்கின்றனர் அதனால்தான்
நமக்கு வரும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது
உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆஸாத் சாலியின் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு ஒயில் தெளித்து அந்த
இடத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் ஓட்டமாவடி சுற்றுவட்டச் சந்தியில்
ஆஸாத் சாலியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு குழுவினரால்
எதிர்ப்பு வசனங்களை எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த
போதிலும் ஆஸாத் சாலியின் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
Post a Comment