கல்முனை
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மோட்டார் பைசிக்கள்கள் களவாடி
செல்லப்படுவது தொடர்பாக பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறு
கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொள்கிறார்.
- 1.தங்களது மோட்டார் பைசிக்கள்களை கண்ட கண்ட இடங்களில் நிறுத்தி வைக்காமல் (BICYCLE PARK) இடங்களில் மட்டும் நிறுத்தி ஹென்டில் பூட்டை சரியாக போட்டு வைக்கவும்.
- 2.விசேடமாக ஹீரோஹொன்டா இன ஸ்பிளன்டர், பெசன்பிளஸ், மற்றும் பஜாஜ் இன டிஸ்கவரி போன்ற மோட்டார் பைசிக்கள்களின் ஹென்டில் பூட்டுக்கள் இலகுவாக திறந்து கொள்வதற்கு வாய்ப்பாகவுள்ளதனால் இது சம்பந்தமாக உரிமையாளர்கள் கவனமாக இருக்கவும்.
- 3.தங்களது மோட்டார் பைசிக்கள்களை பாதுகாப்பான பைசிக்கள் நிறுத்தும் இடங்களில் (BICYCLE PARK)யில் நிறுத்தி வைத்தாலும் நீண்ட நேரம் பைசிக்கள்களை தனிமைப்படுத்த வேண்டாம்;.
- 4.தங்களது மோட்டார் பைசிக்கள்களின் டயர்களில் உள்ள இலக்கங்களை குறித்து பாதுகாப்பாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
- 5.மோட்டார் பைசிக்கள்களின் பதிவப் பத்தகம், ஆண்டு அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் போன்ற தஸ்தாவேஜ்களை மோட்டார் பைசிக்கள்களில் வைக்காமல் தங்களது கைவசம் வைத்துக் கொள்ளவும்.
- 6.தாங்கள் நிறுத்தி வைத்த மோட்டார் பைசிக்கள் காணாமல் போகுமிடத்து காலதாமதமின்றி பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தரவும்.
- 7.சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடுவது அவதானிக்கப்பட்டால் உடன் கல்முனை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தரவும்.
பொலிஸ் நிலைய : 0672229222
நிலைய பொறுப்பதிகாரி : 0672229226
Post a Comment