
நோயாளிகளை தவிக்க விட்டு தொலைக்காட்சியில் கிரிக்கட் ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கரபிடிய போதனா வைத்தியசாலையிலேயே குறித்த
சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தென் மாகாண சபை உறுப்பினர் விஜேபால
ஹெட்டியாராச்சி நேற்று சபையில் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினம், நோய்வாய்ப்பட்டிருந்த தனது
தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் குறித்த
சம்பவத்தை கண்டித்த போது, பொலிஸை அழைத்து ஊடகவியலாளர் தமது உத்தியோகபூர்வ
செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக முறையிட்ட வைத்தியர்கள் அவரை
பொலிஸார் கைது செய்யவும் காரணமாக இருந்தமையை சபையில் வெளிப்படுத்திய அவர்
குறித்த வைத்தியசாலை கடந்த ஒரு வருட காலமாக தமது சேவையை சரிவரச்
செய்வதில்லை எனும் முறைப்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியமை
குறிப்பிடதக்கது.
Post a Comment