--
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் கிண்ணியா நகரில் பொதுமக்களுக்கும் விஷேட
அதிரடிப்படையினருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின் காரணமாக அங்கு பதட்டம்
நிலவுகின்றது.
நேற்று கிண்ணியாவின் குட்டிக்கராச்சி
பகுதியில் மரம் மற்றும் விறகுகளை ஏற்றிக்கொண்டு வந்த மாட்டு வண்டிகளை
போலீசார் சோதனை செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து இந்த மோதல்கள் தலை தூக்கியது.
கொழும்பில்
இருந்து 240 கிலோமீட்டர் மற்றும் திருகோணமலை நகரில் இருந்து 20 கிலோமீட்டர்
தொலைவுகளில் உள்ள கிண்ணியா நகரம் கிழக்கு மாகான சபை முதலமைச்சர் நஜீப் ஏ
மஜீத் அவர்களின் சொந்த ஊர் என்பது குறிப்பிட தக்கது.
இவ்வாறு மரம் ஏற்றிக்கொண்டு வந்த ஆறு
மாட்டு வண்டிகளை போலீசார் மரம் வெட்ட மற்றும் கொண்டு செல்ல முறையான
அனுமதிப்பத்திரங்களை இந்த மாட்டு வண்டி ஓட்டுனர்கள் வைத்திருக்கவில்லை என்ற
அடிப்படையில் கைப்பற்றியதோடு மாட்டு வண்டிகளை ஒட்டியோர் மற்றும் அதில்
பயணம் செய்தோரையும் கைது செய்தனர்.
எனினும் மரம் வெட்டுவோர் மற்றும் மாட்டு
வண்டி செலுத்தி வந்தோர் பொலிசாருடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவே போலீசார்
தங்களை கைது செய்யவோ அல்லது மாடுவண்டிகளை கைப்பற்றவோ கூடாது என அவர்கள்
வாதிட்டனர்.
இந்த ஆறு மட்டு வண்டிகள் ஏற்றி வந்த
பொருட்களுடன் கிண்ணியா போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் கைது
செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனிடையே சம்பவ இடத்தில் பெரும் திரளான
மக்கள் கூடினர். இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என
போலீசாரை நோக்கி கூச்சலிட்டதுடன். பாதையின் நடுவே அமர்ந்து
வாகனப்போக்குவரத்தை மறித்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்
என போராட்டம் நடத்தினர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அவதானித்த போலீசார் சம்பவ இடத்துக்கு விஷேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர்.
ஸ்தலத்துக்கு வந்த அதிரடிப்படையினர் பொதுமக்களை கலைக்க முயற்சிகள் மேற்கொண்டதை தொடர்ந்து பதட்ட நிலை மேலும் அதிகரித்தது.
ஒரு நிலையில் அதிரடிப்படையினர் பொறுமை
இழந்து பலத்தை பிரயோகித்து மக்களை கலைக்க முயன்றனர். இதன் போது மக்கள்
எதிர்ப்பு வலுக்கவே அதிரடிப்படையினர் பொதுமக்களை தாக்க ஆரம்பித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான மக்கள்
வெகுண்டெழுந்து அதிரடிப்படையினரை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர். அத்துடன்
மக்கள் கூடம் தொடர்ந்து அதிகரித்து அதிரடிப்படையினர் மக்களால்
சூழப்பட்டனர்.
மக்கள் சுற்றிவளைக்கப்பட்ட
அதிரடிப்படையினரை நெருங்க முனைந்த போது அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி
வேட்டுக்களை தீர்த்ததோடு மக்கள் இன்னும் தம்மை நெருங்கினால் அவர்கள் மீதி
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.
இதை தொடர்ந்து அதிரடிப்படையினரை நோக்கி
நெருங்குவதை தவிர்த்த பொதுமக்கள் அந்த பகுதியில் தொடர்ந்தும் நின்றதோடு
அதிகரித்த பதட்ட நிலை காணப்பட்டது. இதேவேளை மேலும் அதிக அதிரடிப்படையினர்
சம்பவ இடத்தை வந்தடைந்தனர். இவர்கள் மிகவும் கோபத்துடன் காணப்பட்டனர்.
அதிரடிப்படையினர் தமது கோபத்தை மக்கள் மீது
காட்ட ஆரம்பித்தனர். கூட்டத்தை கலைக்கிறோம் என்ற போர்வையில் மக்களை
சரமாரியாக தாக்க தொடங்கினர். அத்துடன் வானத்தை நோக்கி வேட்டுக்கள்
தீர்க்கப்பட்ட வண்ணமிருந்தது. இவ்வாறு தீர்க்கப்பட்ட வெட்டுகளில் சில
குடிநீர் விநியோக தாங்கி ஒன்றை சேதப்படுத்தியதால் குடிநீர் விநியோகமும்
பாதிக்கப்பட்டது.
அதிரடிப்படையினரின் தாக்குதல் தீவிரமடைய
அச்சமடைந்த மக்கள் சிதறி ஓடினர். இவ்வாறு ஓடிய மக்களை அதிரடிப்படையினர்
துரத்திச்சென்று தாக்கினர். முஸ்லிம் வாலிபர்கள் தனியாக பிரிக்கப்பட்டு
தாக்கப்பட்டனர். அத்துடன் அதிரடிப்படையினர் சில வாகனங்களையும்
சேதப்படுத்தினர்.
இந்த உக்கிரமான தாக்குதலால் கிண்ணியா
பிரதேசம் வெறிச்சோடியது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வீடுகளில் முடைங்கிய
மக்கள் வெளியே வர முயலவில்லை.
இதேவேளை கொழும்பின் பாதுகாப்பு அமைச்சின்
அதிகாரிகள் இந்த சமபவம் பற்றி அருட்டப்பட்டனர். இவர்களின் உத்தரவுக்கமைய
அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினர்
பாதுகாப்பு பொறுப்புக்களை ஏற்றனர்.


Post a Comment