உலக கெசினோ மன்னன் லாஸ் வேகாஸ் பாணியில் இலங்கையில் பாரிய கசினோ மையங்கள்
அமைக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன இந்த அறிவிப்பை நேற்று பாராளுமன்றில் விடுத்தார்.
குறைந்தபட்சம் 400 அறைகளைக் கொண்ட பாரியளவிலான கசினோ சூதாட்ட மையமொன்று அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த சூதாட்ட மையம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூதாட்ட மையத்தின் ஊடாக பெருமளவிலான தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் இதனை ஓர் சிறந்த முதலீடாக கருத வேண்டுமென பிரதி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கெசினோ மையத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment