அனுராதபுரம் மாவட்டம் ஹொரவப்பொத்தானை முஸ்லீம் மக்கள் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு விழா சிறப்பாக அண்மையில் ஹொரவப்பொத்தானை முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அனுராதபுர மாவட்ட சாசனா பல மண்டலே புதிய செயலாளர் பதவியைப் பெற்ற விமலரத்ன
தேரரை முஸ்லீம்கள் கௌரவிக்கும் நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஹொரவப்பொத்தானை நகரை சூழவுள்ள பல விகாரைகளின் விகாராதிபதிகள்
ஹொரவப்பொத்தானை பிரதேச உலமா சபை உறுப்பினர்கள், பிரதேச மௌலவிகள் மற்றும்
வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ப..சஹீது, பிரதேச செயலாளர் சாந்த தசனாயக்க
பிரதேச சபை உதவி தவிசாளர் எ.ஆர்.எம்.உசைன், வலயக் கல்வி அலுவலக
உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள மற்றும் ஆசிரியர்கள்;, நகர
வர்த்தகர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனந்களின் உத்தியோகத்தர்கள்
மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்விற்கு
=பேச்சாளராகக் கலந்து கொண்ட ரத்னபுர கலீல் மௌலி, கௌரவிக்கப்பட்ட விமலரத்னா
தேரர் உட்பட பலர் உரையாற்றினர்.
இந் நிகழ்வில் ஹொரவப்பொத்தானை வாழ் முஸ்ம்கள் சார்பாக மௌலவீ எ.எல்.மாபீர்
அவர்களும் ஹோப் ஓப் பியூப்பில் சார்பாக வை.எம். நிம்சாத் அவர்களும்
அனுராதபுர மாவட்ட சாசனா பல மண்டலே புதிய செயலாளர் பதவியைப் பெற்ற விமலரத்ன
தேரர் அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தனர்.


Post a Comment